அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் சுமார் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தாலும் மாநாட்டில் விஜய் பேசிய வார்த்தைகள் இன்னமும் விவாதங்களாக உள்ளது
இந்நிலையில், விஜயை சீமான் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். அதில், மதுரை ஆணையூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு சீமான் பதிலளித்தார். அப்போது, விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள்.. அதை வைத்து எடை போடாதீர்கள். நான் வைத்திருப்பது விதை நெல். பதறு கிடையாது. பிப்ரவரி 7-ந் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு திருச்சியில் வைக்கிறேன். அதை பாருங்கள் மாநாட்டில் எவ்வாறு ஒரு தலைவன் உரை நிகழ்த்துவேன் என்று அதை பாருங்கள் மாநாடு எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். மாநாடு எப்படி இருக்கும் என்று புரியும்.

விஜயகாந்த் பற்றி பேசுவதனால் வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல் சுவாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள் தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள். அணில் ஜங்கிள் ஜங்கிள் என்று அழைக்கப்பட வேண்டும். அங்கிள் என்று ஏன் கூப்பிடுகிறது. அணில் ஏன் UNCLE, UNCLE என கத்துகிறது, JUNGLE JUNGLE என்று தானே கத்த வேண்டும். கடந்த மாநாட்டில் CM சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக எப்படி மாறினார் என சீமான் கேள்வி எழுப்பினார்.