பெண்கள் கையிலிருந்து கரண்டியை பிடிங்கிட்டு புத்தகங்களை கொடுங்கனு பெரியார் சொன்னார். ஆனால் இவங்க மறுபடியும் பெண்கள் கையில் கரண்டியை கொடுக்கக்கூடிய நிலையை தான் தவெக தொண்டர்களும், தவெக தலைவரும் வலியுறுத்துறாரோ என வைஷ்ணவி கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தாத்தா அதிமுக, அம்மா திமுக என அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த சோசியல் மீடியாக்களில் பிரபலமாக வலம் வந்த கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இன்ஸ்டா புகழ் வைஷ்ணவி விஜய் தவெக கட்சியை தொடங்கியதும் தன்னை கட்சியில் இணைத்து கொண்டு தமிழக வெற்றி கழகத்தின் விர்ச்சுவல் வாரியர்களில் ஒருவராக சமூக வலைத்தளங்களில் இருந்து வந்தவர். தவெகவில் அக்கா என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இவர் சில மாதங்களுக்கு முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் வைஷ்ணவி, நேற்றைய முன்தினம் கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்தார். அந்த புகாரில், தவெகவில் இருந்து வெளியேறியது முதல் என்னை பற்றி தவெகவினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது சம்பந்தமாக தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிடுவார் என்று நினைத்தேன், ஆனால் அப்படி எதுவுமே வெளியிடவில்லை, இதற்கு மேலும் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இல்லை எனவே விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளேன்.

இப்படி ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகள் பரப்பும்போது பெண்களுக்கு எப்படி அரசியல் களத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். பெண்கள் கையிலிருந்து கரண்டியை பிடிங்கிட்டு புத்தகங்களை கொடுங்கனு பெரியார் சொன்னார், ஆனால் இவங்க மறுபடியும் பெண்கள் கையில் கரண்டியை கொடுக்கக்கூடிய நிலையை தான் தவெக தொண்டர்களும், தவெக தலைவரும் வலியுறுத்துறாரோ என்று தோன்றுகிறது என வைஷ்ணவி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தவெக தலைவர் மீது வைஷ்ணவி புகாரளித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்விஎழுப்பினர். அதற்கு வைஷ்ணவி பதிலளிக்கையில் , “தவெகவில் இருக்கும் ஒவ்வொருவரும் எங்களுடைய வாரியர்கள் தான்னு சொன்ன தலைவர் ஏன் அறிக்கை வெளியிடக்கூடாது. நாங்கள் கருத்தியல் ரீதியான கேள்விகளை தவெகவினரிடம் முன்வைத்தாலும் கூட அவதூறான கருத்துக்கள் தான் கூறுகிறார்கள்” என வைஷ்ணவி தெரிவித்தார்.