கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் 123 -வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்ட காமராஜரின் படத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல் திருமாவளவன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் திமுக உடன் பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்