’இப்பல்லாம் யாரு ஜாதி பாக்குறா?’’ என்ற ‘’பொது நம்பிக்கைக்கு’’ மாறாக, ஜாதி அமைப்பு இந்தியா, இந்து மதம், கடந்து, தெற்காசியா முவழுதும், அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் மத்தியிலும், அனைத்து மதங்களிலும் இயங்கும் வன்முறையுடன் கூடிய ஒடுக்குமுறைச் சமூக அமைப்பாகும். இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தான், ஜோர்டான், ஏமன், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் முதலான நாடுகளில் குடியேறிய புலம்பெயர்ந்த சமூகங்களிடம் ஆணவக் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆணவக் கொலையினால் கொல்லப்படுவதாக தரவுகளில் பெரும்பாலும் சாதிக் கட்டமைப்பு காரணமாக நிகழ்கிறது. ஜாதிய பாரபட்சங்கள் காரணமாக காலம் காலமாக மக்கள் மண்டையில் புரையோடி போய் உள்ள சாதி பெருமையின் காரணமாக இந்த கொலை.
இந்நிலையில், மயிலாடுதுறை அருகேயுள்ள அடியமங்கலம் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் – ராஜலட்சுமி தம்பதியருக்கு இரு மகள்களும், டூவீலர் மெக்கானிக் வைரமுத்து என்ற மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். பட்டியலினத்தைச் சேர்ந்த இருவரும் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்துள்ளனர்.
மெக்கானிக் வைரமுத்து அதே பகுதியைச் சேர்ந்த மாலினி என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாலினியின் தாய் வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், மாலினிக்கு அவரது தாய் மற்றும் சகோதரர்கள் குகன், குணால் ஆகியோர் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
மாலினி சென்னையில் வேலை பார்த்து வரும் நிலையில் மாலினியின் தாய் விஜயா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும் வைரமுத்துவிடம், என் மகளை விட்டுவிடு எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. ஆனாலும் அவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் பேசி வந்தார். இந்நிலையில் விஜயா, வைரமுத்து வேலை பார்க்கக்கூடிய டூவீலர் ஒர்க்ஷாப்பிற்குச் சென்று வைரமுத்துவை மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கிறார்.
அப்போது இரு குடும்பத்துக்குமான அந்தஸ்து தொடர்பாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அத்துடன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இளம் பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணையின்போது, மாலினி தனது காதலில் உறுதியாக இருந்ததோடு, “என் குடும்பத்தினரிடம் என்னை அனுப்பினால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 12-ந் தேதி காவல்துறை மாலினியை வைரமுத்து மற்றும் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அப்போது, மாலினியின் தாயும், சகோதரர்களும் “இனி எங்களுக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லை” என்று எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாலினி வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, வைரமுத்துவின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர். இதைக் கேட்டு சமாதானமடைந்த மாலினி, சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்துள்ளார். மாலினி சம்பவத்தன்று இரவு வேலைக்காக சென்னைக்குக் கிளம்பினார்.
வைரமுத்து மாலினியை அனுப்பிவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார். அடியக்கமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியவரை ஓட ஓட விரட்டிச் சென்று மர்ம நபர்கள் கொலை செய்தனர். இந்தச் சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மாலினியின் தாய் விஜயாவின் தூண்டுதலின் பேரிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. வைரமுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மயிலாடுதுறை ஒன்றிய துணைத் தலைவராக இருந்துள்ளார். இதனால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.