ஆந்திராவில் பவன் கல்யாண் சிவப்பு வேட்டி, தமிழ்நாட்டில் பச்சை வேட்டி… திடீரென நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், இங்குதான் வளர்ந்தேன் என சொல்வதற்கான காரணம் பழனிச்சாமிக்கு பவன் கல்யாண் பக்தராக மாறிவிட்டாரா? பவன் கல்யானுக்கு பைத்தியம் முற்றிவிட்டது என ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
YSR காங்கிரஸ் நிறுவனர் ராஜசேகர ரெட்டியின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமை ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு ரோஜா பதிலளித்தார். அப்போது, இன்று YSR-ன் 76 வது பிறந்தநாள். YSR பின்னால் நாங்கள் இருப்பது எங்களுக்கு பெருமை. YSR மறைந்து 16 வருடங்கள் ஆனாலும் அவரை நாங்கள் கடவுளாக மனதில் வைத்துள்ளோம். ஏழைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற YSR-யை பின்பற்றி ஜெகனும் நடந்து வருகிறார்.
டிராமா ஆர்டிஸ்ட் பவன் கல்யாண் மற்றும் பொய்யான பேச்சைப் பேசி முதலமைச்சராக இருக்கும் EVM பாபு. அவரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆந்திராவில் EVM இயந்திரத்தை ஹேக் செய்து தான் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆந்திராவில் EVM கவர்மெண்ட் தான் ஆட்சி செய்கிறது. தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத அரசாக ஆந்திர அரசு செயல்பட்டு வருகிறது.
சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமான சிந்தூரில் மாம்பழ வியாபாரிகள் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். பவன் கல்யாண் சூட்டிங் செய்து கொண்டு சூட்டிங் பிசியில் உள்ளார். பவன் கல்யாண் ஆந்திராவில் சிவப்பு வேட்டி, தமிழ்நாட்டில் பச்சை வேட்டி. திடீரென பவன் கல்யாண் நான் தமிழ்நாட்டில் பிறந்தேன், இங்குதான் வளர்ந்தேன் என சொல்வதற்கான காரணம் என்ன, பழனிச்சாமிக்கு திடீரென பவன் கல்யாண் பக்தராக மாறிவிட்டாரா? பவன் கல்யானுக்கு பைத்தியம் முற்றிவிட்டது.
ஆந்திர பிரதேசத்தில் மக்கள் படும் கஷ்டம். பவன் கல்யானுக்கு வாக்களித்தால் எல்லா இடத்திலும் ஏற்பட கூடும். மக்கள் தகுதியானவர்களை முறையாக தேர்ந்தெடுக்க வேண்டும். பவன் கல்யாண் டைம் பாஸ் செய்து வருகிறார், சீரியஸ் அரசியல்வாதி கிடையாது. MGR, NTR, ஜெயலலிதா உள்ளிட்டோர் அரசியலுக்கு வந்ததற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார்கள். இப்போது சினிமாவில் இருந்து வருபவர்கள் டைம் பாஸ் பாலிடிக்ஸ் செய்து வருகிறார்கள். சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சினிமாவில் இருந்து வருபவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், என்றால் ஃபுல் டைம் பாலிடீஸுக்கு வர வேண்டும். நடிகர் விஜய் MGR, ஜெயலலிதா மற்றும் NTR மாதிரி செயல்பட வேண்டும். மக்கள் உங்களை நம்பும்போது மக்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சண்டை போட வேண்டும். பாதியிலேயே விட்டுவிடக்கூடாது. சினிமா ஆர்ட்டிஸ்ட் பப்ளிசிட்டி உள்ளது. அதனால் அவர்கள் செய்யும் கெட்ட காரியங்கள் வெளியாகி விடுகிறது, அவர்கள் செய்யும் நல்ல காரியங்கள் பெரிதாக வெளியே வரவில்லை என ரோஜா தெரிவித்தார்.