முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 10.40 மணியளவில் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர்.
மேலும் பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன்,உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் லேசான தலைசுற்றல் காரணமாக மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.