பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. பொள்ளாச்சி மக்களின், காவல் தெய்வமாக விளங்கும், மாரியம்மன் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும், மாசி மாதம், வெகு விமர்சையாக, கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த மாதம் 17-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. மேலும் கடந்த மாதம் 24-ந் தேதி கம்பம் நடப்பட்டு, கம்பத்திற்கு பத்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை கொத்துகள் வைத்தும், உப்பு கொட்டியும் தினமும் வழிபட்டனர்.
கடந்த 6-ந் தேதி வெளிப்பூவோடு துவங்கி, தொடர்ந்து கொடி கட்டுதல், அலகு குத்தி பூவோடு எடுத்தால் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 11-ந் தேதி காலை 5 மணிக்கு மாவிளக்கு 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயர வெள்ளித்தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோயில் வளாகத்தில் இருந்து துவங்கும் தோரோட்டம் மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் தேர் நிறுத்தப்பட்டது. ங்கு பக்தர்கள், தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி அம்மனை வழிபட்டனர்.

இரண்டாம் நாள் தோரோட்டம் 12-ந் தேதி இரவு, வெங்கட்ரமணன் வீதி, உடுமலை ரோடு வழியாக சென்று சத்திரம் வீதியில் தேர் நிறுத்தப்பட்டது. அது சமயம். நல்விடியல் அறக்கட்டளை அறங்காவலர், முத்து பாய், கவிஞர் முருகானந்தம். எம்,சி, கலைவாணி கலந்து கொண்டு, நீர் மோர், ரஸ்னா ஜூஸ், பக்தர்களுக்கு வழங்கினார்கள். 13-ந் தேதி மூன்றாம் நாள் தோரோட்டத்திற்கு பின் தேர் நிலை நிறுத்தப்படுகிறது. அதன்பின், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. அடுத்த நாள் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 16-ந் தேதி மஹா அபிஷேகமும் நடக்கிறது.