உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்குத்தொடர்ச்சி மலை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்புப் புள்ளி நீலகிரி “மலைகளின் அரசி” ஆகும்.
அடர்த்தியான சோலைகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள், பசும்புல்வெளிகள், எழில்கொஞ்சும் அருவிகள், சிற்றோடைகள், ஏரிகள் ஆகியவற்றிற்கிடையே அமைந்துள்ள காய்கறித் தோட்டங்கள், கண்கவர் காட்சிமுனைகள், விலங்கினங்கள், அரிதான தாவரங்கள், அற்புதமான மலையேற்றப் பாதைகள், எண்ணிலடங்கா பாரம்பரிய இடங்கள், வியக்க வைக்கும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள், பல்வேறு வண்ணங்களுடன் கூடிய வான்வெளிகள், மாசு இல்லாத சுற்றுச்சூழல், மூடுபனி, மேகக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய நீலகிரி மாவட்டம் பார்பவர்களுக்கு விருந்தளிக்கக்கூடிய, மனதிற்கு இதமளிக்கக்கூடிய இடமாக உள்ளது.

மற்ற தினங்களை விட கோடை காலங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊட்டிக்கு வருகை புரிகின்றனர். அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் ஊட்டி நகரப் பகுதியில் பல்வேறு பூங்காக்களிலும் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வரும் சூழலில், சுற்றுலாப் பயணிகள் கண்காட்சிகளை ரசிப்பதோடு ஊட்டி நகரப் பகுதிகளில் மற்ற சுற்றுலாத் தலங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
ஊட்டிக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் விரும்பி பயணிக்கும் ஒரு இடமாக படகு இல்லம் ஏரி அமைந்துள்ளது. ஊட்டியின் குளுகுளு காலநிலையில் இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு அலாதி இன்பம் அளிக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் ஊட்டி படகு இல்லம் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் ஆர்வத்துடன் சுற்றுலாப் பயணிகளும் படகு சவாரியில் ஈடுபட்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோடை விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பாரம்பரிய படகுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கிக் கௌரவித்தார்.