MGR கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியல் செய்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்குக் காரணமாக MGR இருந்தார். ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட கட்சியின் தலைவராக அமையப் பாதை MGR போட்டுக் கொடுத்தார் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் விமர்சனம் செய்தார். தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல்கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது.
மேலும் தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சி அமைக்க முடியாமல் இருந்ததை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைத்து அதிமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்தார் . அதோபோல திமுக அடுத்தடுத்து வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க மு.க.ஸ்டாலின், தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். மறுபுறம், அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி தன் மீதான தொடர் தோல்வி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விரும்புகிறார்.

மேலும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் சில அமைப்புகள் 2019 தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணி உருவான நிலையில் அதில் இருந்த கட்சிகள் தற்போது வரை தொடர்ந்து பக்கபலமாக இருக்கிறது. ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அமைந்திருக்கும் நிலையில், பாஜகவோடு கடந்த காலங்களில் கூட்டணி அமைத்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் சேரலாம் என கூறப்படுகிறது. மேலும் பாமகவும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார். மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.

மறுபுறம் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அதிமுக மற்றும் பாஜக உடைக்கும் வழிகளில் முயற்சி செய்த போதிலும் அவர்களின் பாச்சா திமுக கூட்டணியில் இருபவர்களிடன் பலிக்கவில்லை. மேலும் திருமாவளவன் அவர்களுக்கு தெரியவில்லை என்று பல இடங்களில் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்பத்தூரில் திமுக சார்பாகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், புதிதாகக் கிளம்பி இருக்கும் அமைப்புகள் தமிழ் தேசியம் பேசுகிறோம் என்ற பெயரில், தமிழ்த் தேசியத்தின் உண்மையான எதிரி யார் என்பதை மக்களுக்குச் சொல்லாமல், தமிழ்த் தேசியத்தின் எதிரி கருணாநிதியும், திமுகவும் தான் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள். அவருக்கு நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்போம் என்று வெறுப்பை உமிழக் கூடிய அளவிற்குப் பேசுகிறார்கள். ஆனால் என்றாவது MGR, ஜெயலலிதா, அண்ணா குறித்து எங்காவது விமர்சித்தது உண்டா? ஏன் கருணாநிதி மட்டும் குறி வைக்கப்படுகிறார்.. பெரியார் அரசியலைத் தான் அண்ணா பேசினார். பெரியாரின் பேருருவம் அண்ணாவால் தான் வெளிப்பட்டது.

இல்லையென்றால் மறைக்கப்பட்டு இருக்கும். MGR உருவானதால் ஒரு நன்மை உண்டானது. MGR கருணாநிதிக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்தார், விமர்சனம் செய்தார். திராவிட இயக்கத்திற்குள் பார்ப்பனியத்தை ஊடுருவ செய்வதற்குக் காரணமாக இருந்தார். ஒரு பார்ப்பன பெண்மணியே திராவிட கட்சியின் தலைவராக அமையப் பாதை போட்டுக் கொடுத்தார் என்ற விமர்சனங்கள் இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், தேசியக் கட்சிகளால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் இருந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுக என்று அரசியல் சுழல நேர்ந்தது. காங்கிரஸ் வளர முடியாமல் போனது என்பதை விட, பாஜக காலூன்ற முடியாமல் போனது. காங்கிரஸ் இங்கே வலிமைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு எதிராக பாஜக காலூன்றி இருந்திருக்கும். காங்கிரஸ் வலிமை குறைந்ததற்கு எம்ஜிஆரின் எழுச்சி காரணம். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா வந்த போதும், கருணாநிதி தான் மையப் புள்ளியாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.