அன்பு நண்பர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் நடை பயிற்சி சென்றபோது திடீர் தலைச்சுற்றல் ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள “முதல்வர் ஸ்டாலின் முகாம்” அலுவலகத்துக்கு இன்று மாலையில் கமல்ஹாசன் சென்றார். மு.க. ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து கொடுத்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மக்களின் முதலமைச்சர், அன்பு நண்பர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் புத்துணர்ச்சியோடு மக்கள் பணிக்குத் திரும்பியதில் பெருமகிழ்ச்சி. ஆனந்தமான இந்த உரையாடலின்போது துணை முதல்வர் தம்பி உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தது கூடுதல் மகிழ்ச்சி” என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.