கடன் வாங்க விரும்பும் பெண்கள், 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை, விலைப்புள்ளி, வங்கி கணக்கு விவரங்களுடன் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கடன் வசதியாக்கல் முகாமில் இலவசமாக விண்ணப்பித்து கடன் பயன்பெறலாம் என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகரிக்க ‘தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மகளிர் மற்றும் திருநங்கைகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும், தொழில்திறன் சார் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மேலும் திட்ட மதிப்பில் ரூ.10 லட்சம் வரை தொழில் செய்ய பிணையமில்லாமல், வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும். திட்ட தொகையில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மானியம் அளிக்கப்படும். இதன்மூலம் உற்பத்தி, சேவை மற்றும் வணிகத்தொழில்கள் தொடங்கலாம்.
அடிப்படை கல்வித்தகுதி மற்றும் குடும்ப வருமான வரம்பு எதுவும் இத்திட்டத்தில் விதிக்கப்படவில்லை. எனவே ஆர்வம் கொண்ட 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட மகளிர் மற்றும் திருநங்கைகள் புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, விலைப்புள்ளி, வங்கி கணக்கு விவரங்களுடன் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கடன் வசதியாக்கல் முகாமில் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்” இந்த தகவல் ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈதமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கவும் தமிழக அரசு “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்” (என்ற புதிய திட்டத்தை 2025-26 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் தகுதிகள் நிதியுதவி மற்றும் மானிய விவரங்கள் கடனுதவி: உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களைத் தொடங்க அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
திட்ட மதிப்பீட்டில் 25% மானியம் (அதிகபட்சமாக ₹2 லட்சம்) தமிழக அரசால் வழங்கப்படும். பயனாளி தனது சொந்த முதலீடாக திட்ட மதிப்பில் 5% மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள 95% தொகையை வங்கிக் கடனாகப் பெறலாம். இந்தக் கடனைப் பெற வங்கிக்கு எந்தவிதமான சொத்துப் பிணையமும் (Collateral) வழங்கத் தேவையில்லை. ‘தகுதி அளவுகோல்கள் பாலினம்: பெண்கள் மற்றும் திருநங்கைகள் மட்டுமே இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். வயது வரம்பு: 18 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கக் கல்வித் தகுதி அல்லது குடும்ப வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். வசிப்பிடம்: விண்ணப்பதாரர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பயிற்சி மற்றும் மேம்பாடு வங்கி கடன் ஒப்புதல் அளித்த பிறகு, பயனாளிகளுக்குத் தொழில் மேலாண்மை குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்,
தொழில் முனைவோர் பயிற்சி: 3 நாட்கள் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படும். திறன் பயிற்சி: தேவைப்படும் பட்சத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மூலம் கூடுதல் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும். விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் விண்ணப்பங்களை www.msmeonline.tn.gov.in/twees என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை சாதிச் சான்றிதழ். தொழில் திட்ட அறிக்கை விலைப்புள்ளி பட்டியல் (Quotation – GST எண்ணுடன்). பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல். குறிப்பு: ஏற்கனவே கலைஞர் வினைத்திட்டத்தில் (KKT) பயன்பெற்ற மகளிர், தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டத்தின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்.