வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 164 பேர் உயிரிழந்த நிலையில் 971 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு முதற்கட்டத் தகவல் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
தென் அமெரிக்க கண்டத்தின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அழகான மநாடு வெனிசுலாவில் முதலாவது நிலநடுக்கம் 7.2 ரிக்டர், அடுத்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் என அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எங்கும் மரண ஓலமாக கேட்கிறது. .
இந்த நிலநடுக்கமானது, கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ள மோரோன் என்ற பகுதிக்கு மேற்கே, தலைநகர் கராகஸிலிருந்து சுமார் 168 கிமீ தொலைவில், நடுக்கடலுக்கு அடியில் 13 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு நிமிடத்திற்குள், அதைவிட மிக சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் அளவிலான 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில், மோரோன் பகுதிக்கு தென்மேற்கே 16 கிமீ தொலைவை மையமாக கொண்டிருந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களை தொடர்ந்து, கரீபியன் தீவுகளில் ஒன்றான விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டொமினிகன் குடியரசு அதிகாரிகளும், தங்கள் தீவு பகுதிக்கு சுனாமி ஆபத்து இருப்பதாக எச்சரித்தனர். இருப்பினும் சிறிது நேரத்திற்கு பிறகு புவேர்ட்டோ ரிகோ பகுதிக்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கராகஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கடுமையாக ஆட்டம் கண்டன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேலும் வெனிசுலாவின் மிக முக்கியமான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகையால் சூழ்ந்தது. அங்கிருந்த பயணிகள் பீதியில் அலறியடித்து கொண்டு ஓடும் காட்சிகள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சிலர் அங்கிருந்த மேஜைகளுக்கு அடியில் தஞ்சம் புகுந்து உயிர் பிழைக்கும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.