தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க தேவையான மெஜாரிட்டி விஜய்யின் தவெகவுக்கு இல்லை. மேலும் விஜய் ஆட்சி அமைக்க அனுமதி கோரியும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை திடீர் சந்திப்பு ரஜினிகாந்த் முதலமைச்சரா..!? சாத்தியம் இருக்கிறதா..!? இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளார். இதில் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்நிலையில் தான் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 233 ஆக சரியும். அதன்படி மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்கள் வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் சப்போர்ட் தவெகவிற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தவெகவின் பலம் 112 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது.
இந்நிலையில் முதலில் முதல்வராக பதவியேற்றுவிட்டு மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய் நினைக்கிறார். அதன்படி இன்று அவர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் 117 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் விஜய்யை தற்போது வரை ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைக்கவில்லை.
இதற்கிடையே தான் திடீரென்று இணையதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் பரம எதிரிகளாக உள்ள திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. திமுக கூட்டணி 68 இடங்களிலும் மற்றும் அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக கூட்டணி 68 எம்எல்ஏக்கள், அதிமுகவிற்கு 53 எம்எல்ஏக்கள் என்று 121 பேர் உள்ளனர். இதன்மூலம் மெஜாரிட்டியை நிரூபித்து ஆட்சியை பிடிக்க அதிமுக – திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, ”ஒன்றிணைந்த திராவிடக் கட்சி” என்ற பெயரில் புதிய லோகோ ஒன்று இணையதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. அதில் திமுகவின் உதயசூரியன் சின்னம் மற்றும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை இணைத்து ‘ஒன்றிணைந்த திராவிடக் கட்சி” என்றும், United Dravidian Party என்றும் எழுதப்பட்ட லோகோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் நேற்று ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான சூழலிலும் நான் உங்களுடன் இருப்பேன்” என ஸ்டாலினிடம் ரஜினி கூறியதாக சொல்லப்படுகிறது. ஆகையால் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இணைத்து ரஜினிகாந்த்தை முதலமைச்சராக முயற்சி செய்வதாகவும், அதன் பின்னர் ரஜினிகாந்த் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாத்தியம் இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளது தவெகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.