திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து அவர்கள் தலைமையில் இன்று காலை சுமார் 11:30 மணி அளவில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளிலும் முத்துப்பேட்டை பேரூராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து குடிநீர் வடிகால் வாரியமே ஏற்று நடத்திடவும், தட்டுப்பாடின்றி அனைவருக்கும் குடிநீர் வழங்கிடவும் காலி குடங்களுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.