நவகிரகங்களில் முதன்மையானவரான சூரிய பகவானின் பார்வையில் பிறந்த மாவீரர் கர்ணன் போல கடந்த மே 15-ந் தேதி நடந்த பொது நல வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாமல் வழக்கு போடும் இளைஞர்களை கரப்பான் பூச்சி உடன் ஒப்பிட்டு பேசிய அந்த கரப்பான் பூச்சி அதாவது சூர்யகாந்த் சொல்லில் இருந்த காக்ரோச் ஜனதா கட்சி பிறந்து 70 நாளில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வைத்து உலக வரலாற்றில் ஒரு மாபெரும் சம்பவம் செய்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் முதன்முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 2016 இல் பண மதிப்பிழப்பு, 2017 இல் ஜிஎஸ்ட் அறிமுகம், 2019-ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம், 2020 இல் தேசியக் கல்விக் கொள்கை அறிமுகம், 2020-ஆம் ஆண்டு வேளாண் புதிய சட்டம், 2021 இல் ஜம்மு & காஷ்மீரில் 370 சட்டத்தைத் திரும்பப் பெற்றது, 2022 இல் அக்னிவீர் திட்டம் அறிமுகம் என பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
சில போராட்டங்கள் மாநில அளவில் இருந்தாலும், தேசிய அளவில் கவனம் பெற்ற போராட்டம் என்றால் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தில் இருந்து டிராக்டர்களை ஓட்டிக்கொண்டு டெல்லிக்கு விவசாயிகள் படையெடுத்தனர். அவர்களை தடுக்க ராட்சத கற்கள் தடைகளாக வைக்கப்பட்டிருந்தன. பள்ளம் தொண்டப்பட்டிருந்தது. சாலைகள் முழுதுவதும் இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இது எதுவும் வேலை செய்யவில்லை. அனைத்தையும் தாண்டி அவர்கள் உள்ளே நுழைந்தனர். ஓராண்டு காலம் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதில் உயிரிழந்தனர். இருப்பினும் போராட்டம் பின்வாங்கப்படவில்லை. கடைசியாக மத்திய அரசு 3 புதிய சட்டங்களையும் வாபஸ் பெற்றது. ஆனால், அப்போது கூட மத்திய வேளாண் துறை அமைச்சர் ராஜினாமா செய்யவில்லை.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரை சேர்ந்த அபிஜித் தீப்கே, கல்லூரிப் படிப்பிற்காக புனேவில் முடித்தார். இதன் பிறகு, சில ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியில் தகவல் தொடர்பு குழுவில் இணைந்து பணியாற்றினார். பின்னர் முதுகலைப் பட்டப்படிப்பிற்குத் தயாரான போது அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு தங்கி பட்டப்படிப்பை முடிக்கும் நேரத்தில் அபிஜித் தீப்கே,”எக்ஸ் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நாட்டின் இளைஞர்களை, குறிப்பாக அமைப்பை விமர்சிப்பவர்களையும் தங்கள் கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டார். “ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதையே கடமையாகக் கொண்ட தலைமை நீதிபதியே இப்படிப் பேசியது மிகவும் அபத்தமான ஒன்றாகத் தோன்றியது. கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் அவர் இளைஞர்களை எப்படி ஒப்பிட முடியும்?”
“இது அபிஜித் தீப்கேக்கு கோபத்தை ஏற்படுத்த, தனது எக்ஸ் பக்கத்தில், ‘அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்?’ என்று கேள்வி எழுப்ப ‘ஜென் ஸி’ மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.” அதனை தொடர்ந்து ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஆன்லைனில் நையாண்டி அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனை செய்து ‘எங்களை நீங்கள் கரப்பான் பூச்சி என்று அழைக்கிறீர்கள் என்றால், சரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியையே உருவாக்கலாம்’ என்று முடிவு செய்தோம்.
சோம்பேறியாக இருக்க வேண்டும்… வேலை இல்லாதவராக இருக்க வேண்டும்… தலைமை நீதிபதி குறிப்பிட்டது போல, நீங்கள் எப்போதும் ஆன்லைனிலேயே நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும்… சுருக்கமாகச் சொன்னால், இளைஞர்களை இழிவுபடுத்தும் விதமாக இந்தியத் தலைமை நீதிபதி பயன்படுத்திய ஒவ்வோர் இழிவான கருத்துகளையும், நாங்கள் இந்தக் கட்சிக்கான உறுப்பினர் தகுதியாக நிர்ணயித்தேன்.
உறுப்பினர் பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரங்களிலேயே இதற்கு பிரமாண்டமான வரவேற்பு கிடைத்தது. பெரும்பாலான மக்கள் அனைவரும் இதற்குப் பதிலளிக்கத் தொடங்கியதோடு, தங்களை உறுப்பினர்களாகவும் பதிவு செய்துகொள்ளத் தொடங்கினர்.” அதன் பிறகு, இது வெறும் நகைச்சுவையோ நையாண்டியோ மட்டுமல்ல, அதைவிடப் பெரிதாக மாறப்போகிறது என்பதை உணர்ந்தோம். மக்கள் மத்தியில் ஒருவித விரக்தி மனப்பான்மை மேலோங்கியிருந்தது. உடனே நாங்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கி, கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டோம்.
இன்ஸ்டாகிராமில் எங்களுக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் (எண்ணிக்கை தற்போது 26 மில்லியனைத் தாண்டிவிட்டது) கிடைத்துள்ளனர், மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் உறுப்பினர்களாகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர். சமூக ஊடகங்களில் 26 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் ‘ஜென் ஸி’ இளைஞர்கள் தங்களுக்கென்று ஒரு தனி அரசியல் முன்னணியை விரும்பினர்கள்.
அபிஜித் தீப்கே மீது சில சமூக வலைத்தளப் பயனர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர் பாகிஸ்தானின் ஆதரவாளர் அல்லது கைக்கூலி என அவதூறுகளைப் பரப்பினர். சமீபத்தில் ஒரு இண்டர்வியூவில் இந்தியா திரும்பிய பிறகு கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தை அபிஜித் தீப்கே வெளிப்படுத்தியதாக பெற்றோர் கவலைப்பட்ட நிலையில் இந்தியாவுக்குப் புறப்படும் முன்பே ஜூன் 6-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மெகா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து “இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். என் தலைவிதியை இந்திய அரசியல் சாசனத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன். ஜெய் பீம்!” என்று பதிவிட்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்ததுமும் டெல்லி விமான நிலையத்திலேயே ஜெய் பீம் மொமென்ட் உருவானது மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி காவல்துறையின் முறையான அனுமதியைப் பெற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் “நாங்கள் கேட்டது ‘மேக் இன் இந்தியா’ ஆனால் நீங்கள் கொடுத்ததோ ‘லீக் இன் இந்தியா’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஜூன் 11-ந் தேதி மாலை 4 மணிக்கு சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்திலும், ஜூன் 14-ந் தேதி பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தினர்.
ஜூன் 15-ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் போராட்டத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், திடீரென அபிஜீத்தின் கழுத்தில் இருந்த ஸ்கார்ஃபை பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கியதோடு, பலமுறை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளவும் முயற்சி செய்தனர். ஆனால் எந்த ஒரு பதட்டமும் அடையாத அபிஜித் தீப்கே போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 28-ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரை உண்ணாவிரதத்தை அறிவித்து உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் டெல்லியில் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக பரவியது. வினாத்தாள் கசிவு குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும், நீட் விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தது.
ஆனாலும் போராட்டத்தின் வீரியம் குறையவில்லை. இந்த போராட்டத்தின் முக்கியமான கோரிக்கை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான். இறுதியில் தற்போது தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவை அறிவித்தார். பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறையாகும்.
ஆனால், தமிழகத்தில் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் குப்பை அப்புறப்படுத்துவது, குடிநீர் மற்றும் மின் விநியோகம் போன்ற அடிப்படைப் பணிகளை செய்யக் கூட உள்ளாட்சித் தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் மட்டுமே குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு போன்ற மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகள் முழுமையாகச் செயல்படுத்த முடியும் என ஆதவ் அர்ஜுனா தெரிவிப்பதும் மத்தியில் ஆட்சியை கைப்பற்றினால் அதை செய்வேன் இதை செய்வேன் என்று வெட்டி வீராப்பு பேசி வரும் இவர்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்தாவது திருந்துவார்களா?