திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ராயநல்லூர் நாட்டு வாய்க்கால் வேளாண் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகலாக வசித்து வரும் நிலையில் ஏழை மக்களுக்கு குடிமனை பட்டாவும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரக்கோரி பல ஆண்டுகளாக போராடிவரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தகுதி உள்ள குடும்பத்துக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை.
ஆகையால், உடனடியாக குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிமனை பட்டா மற்றும் கான்கிரீட் வீடுகள் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் குடியேறும் போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 2024 ஆம் ஆண்டு வட்டாட்சியர் எழுத்துப்பூர்வ உறுதியை செயல்படுத்த வேண்டும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ராயநல்லூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்