நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் சுமார் 60 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐஎம் மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தவெக, ஆட்சியமைத்தது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினமான வன்னி அரசு அவர்களை இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர் R. இராஜாராம் அவர்கள் நேரில் சந்தித்தார். மேலும் ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர் நலனை உள்ளடக்கிய சமூக நீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தோழர் வன்னி அரசு அவர்களுக்கு நமது இந்தியா ஃபஸ்ட் சார்பாக வாழ்த்துகள் தெரிவித்து நமது இந்தியா ஃபஸ்ட் இதழை வழங்கினார்.