பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் கூத்தூர் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 196 இடங்களில் நவம்பர் 30-ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்களும் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இந்த முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருமான, இருப்பிட, சாதி சான்றிதழ்களை பெற முடியும். அதேபோல் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு தரப்பில் வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகை பெற இந்த திட்டர்த்தில் மனு அளிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் கட்டிட வசதி, குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், சுய உதவிக்குழு மூலம் கடன் பெறவும் இந்த முகாம்களில் மனு அளிக்கலாம். அதேபோல் மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் மிணைப்பு, இணையவழி வீட்டு மனைபட்டா பெற மனு அளிக்கலாம். இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த முகாம்களில் பெறும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இந்த முகாம் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகின்றது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் கூத்தூர் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நல திட்ட உதவிகள் வழங்கினார்.