தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குப்புசாமி பாஜகவில் இருந்து நேற்று விலகினார். பாஜகவில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ள அண்ணாமலை குப்புசாமி புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார். ‘we the leader’ இது நம்ம இயக்கம் (https://wetheleader.org/) என்ற அமைப்பை தனது இயக்கமாக தொடங்கி உள்ளது. இதன் இணையதள பக்கத்தின் வழியாக இன்று மாலை 7 மணி நிலவரப்படி 14.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
மேலும் இந்த இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதாகவும், வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி களம் காண்பதாகவும் அண்ணாமலை குப்புசாமி தெரிவித்துள்ளார். அண்ணாமலை குப்புசாமியின் இந்த புது அவதாரம் தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி பாஜக மட்டுமின்றி திமுக, அதிமுக, தவெக, சீமானின் நாம் தமிழர் என அனைத்து கட்சிகளுக்கும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே விஜய்யின் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மாற்றத்தை தேடிய பலரும் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.
இதனால் விஜய் எளிதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராகி விட்டார். மேலும் முதல்வராக விஜய் அரசை நடத்துவது அவ்வளவு எளிது அல்ல. குறிப்பாக விஜய்யை விட அண்ணாமலை குப்புசாமி புள்ளி விவரங்களை சொல்லி அடித்து பேசுவார். இது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனை தவெக நிச்சயம் சமாளிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி ஆளும் கட்சியாக எந்த கட்சி இருந்தாலும் எதிர்ப்பலை என்பது இருக்கும். இதனால் அதனை அறுவடை செய்யும் முனைப்பில் அண்ணாமலை உள்ளார். இதனால் நிச்சயம் அண்ணாமலை குப்புசாமியின் அரசியல் வருகை தவெகவிற்கு பாதிப்பை தரலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.