மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடைபெற்றது. மேலும், நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி ராமலிங்க சுவாமி வள்ளலார் அறக்கட்டளை தர்ம சாலையில் சுமார் 100 முதியவர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. இதற்கு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேவேந்திரன் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் பிரமுகர் செந்தில்குமார் மற்றும் கவின்குமார் அவர்களின் முன்னிலையில் நகர காங்கிரஸ் தலைவர் சிவாஜி , டம்பூர் ஆனந்தகுமார், முருகானந்தம், பழனியப்பன், வீரமுத்து, பாஸ்கர், பெரியசாமி, சந்திரசேகர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.