திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு உயர்க்கல்வித்துறையின் வழிகாட்டுதழின்படி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சி வகுப்பின் ஆறாம் நாள் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் பி. ராஜாராமன் அவர்கள் தலைமையில் கல்லூரி மகிழ் அரங்கில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திக் அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு மனநலம், உடல்நலம் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகள் குறித்தும், மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மருத்துவ ரீதியாக சலுகைகள், உதவிகள் குறித்தும், அரசு மருத்துவ நலத்திட்டங்கள் குறித்தும் ஊட்டச்சத்து குறைபாடும் அதனை தீர்க்கும் அரசின் வழிகாட்டுதல்படி உதவிகள் குறித்தும் சிறப்புரையாற்றி மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

முன்னதாக கல்லூரி வரலாற்றுத் துரைத்தலைவர் ராஜா அலெக்ஸாண்டர் அவர்கள் வரேவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக அரசியல் அறிவியல்துறை பேராசிரியர் பி.கிருபாநிதி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் திரளாக கந்துகொண்டனர்.