தாராபுரம் அதிமுகவின் கோட்டை … அந்தக் கோட்டையில் ஓட்டையைப் போட்டு, குதிரைப்பேரம் நடத்தி, சத்யபாமாவை விலைக்கு வாங்கி, இன்று வரை மக்கள் மன்றத்திருந்து அவரை விரட்டியடிக்கிறார்கள். இதற்கு காரணம், திமுகவையும் அதிமுகவையும் பார்த்து தவெக பயப்படுகிறது. “ஒருவேளை இவர்கள் இருவரும் சேர்ந்துவிட்டால் நமக்கு வனவாசம்தானோ?” என்ற அச்சம் என அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பொன்ராஜ், “வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, போட்டியிட வாய்ப்புத் தந்த கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டு, சத்யபாமா இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.. மக்களால் விரட்டப்படுகிறார். “குதிரைப்பேரம் மூலம் 50 கோடி ரூபாய் வாங்கிவிட்டு வந்துள்ளீர்கள்” என்று பொதுமக்களே நேரடியாகக் குற்றம்சாட்டுகிறார்கள். இவருடைய வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது.. இது மக்களுக்கும் நன்றாகப் புரிகிறது. பதவியேற்று 10 நாட்களுக்குள் கட்சி மாற வேண்டிய அவசியம் என்ன?
எம்.ஜி.ஆருக்குப் பிறகும், ஜெயலலிதாவுக்குப் பிறகும் “அதிமுக என்றாலே நான்தான்” என்று கொக்கரித்துக்கொண்டு, அகங்காரத்தோடும் விஜய் பேசுகிறார்.. எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இணையாகத் தன்னை பாவித்துக்கொண்டு, அப்பாவி வேஷம் போட்டுக்கொண்டு, அதிகாரத்தில் அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை அழித்துவிட்டு, பாஜக உருவாக்கிய தவெகவை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, இன்று எம்.ஜி.ஆர் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.. மற்றும் பலர் என்று அதிமுகவை எள்ளி நகையாடும் விஜய்க்குத் தாராபுரம் மக்கள் தக்க பாடத்தைக் கற்பிப்பார்கள்.
தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வரும் மக்கள் யாருமே அங்குள்ளவர்கள் கிடையாது.. வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்படுபவர்கள். அதிமுகவின் கோட்டை அது… 40 சதவீத ஓட்டு வங்கியை வைத்திருக்கக்கூடிய அதிமுகவின் கோட்டை. அந்தக் கோட்டையில் ஓட்டையைப் போட்டு, குதிரைப்பேரம் நடத்தி, சத்யபாமாவை விலைக்கு வாங்கிவிட்டு, இன்று வரை மக்கள் மன்றத்திருந்து அவரை விரட்டியடிக்கிறார்கள். இதற்கு காரணம், திமுகவையும் அதிமுகவையும் பார்த்து தவெக பயப்படுகிறது. “ஒருவேளை இவர்கள் இருவரும் சேர்ந்துவிட்டால் நமக்கு வனவாசம்தானோ?” என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
அதிமுக, திமுக இருவரும் சேர்ந்து 70 சதவீதம் ஓட்டு வாங்கிவிட்டால், தாராபுரத்தில் அதிமுக வென்றும், மதுராந்தகத்தில் திமுக வென்றும்விட்டால், “நமது ஆட்சி கவிழ்க்கப்பட்டு விடுமோ?” என்ற பயம் அவர்கள் மனதில் கவ்விக்கொண்டிருக்கிறது. தாராபுரம், மதுராந்தகம் என இந்த இடைத்தேர்தல் வந்ததற்கு காரணமே, 100 நாட்களில் மதிப்பிழந்த செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக பாஜகவும் தவெகவும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துவதே ஆகும்.
இந்த வாய்ப்பில் 40 சதவீத வாக்குகளை தவெக பெற வேண்டும். அமித்ஷா உதவினால்தான் தவெக வெற்றி பெறும்… தாராபுரத்தில் பணப்பட்டுவாடா நடக்கிறது, அதற்கான வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை எங்கே போயிற்று? ஓட்டுக்கு 500 முதல் 5,000 வரை தூய்மை சக்தி எனப்படும் தவெக கொடுக்கிறது. 100 நாட்களில் இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கான தேர்தல்தான் இது.
தாராபுரத்தில் கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறும். திமுகவின் வாக்குகளும் அதிமுகவுக்குச் சென்றால் 70 சதவீத ஓட்டு கிடைத்துவிடும். அதேபோல அதிமுக வாக்குகள் திமுகவுக்குச் சென்றால், அங்கேயும் 70 சதவீதம் வெற்றி கிடைக்கும். இரண்டு இடங்களிலுமே தவெகவை மக்கள் காலி செய்துவிடுவார்கள் என்றெல்லாம் என பொன்ராஜ்.தெரிவித்தார்.