நான் தம் அடிக்கிற ஸ்டைலப் பாத்து…, ஹே வாடி வாடி வாடி.., கைப்படாத சீடி.., டாடி மம்மி வீட்டில் இல்ல…, தட போட யாருமில்ல…, விளையாடுவோமா உள்ள…, வில்லாளா…, பூமியில் இருப்பது மூணு பங்கு தண்ணி தான் மற்றும் நா ரெடி போன்ற சமூக சீர்திருத்த பாடல்கள் மூலம் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டிற்கும் மேலாக ரசிகர்களை கவர்ந்து இழுத்து அதன் மூலம் இன்று ஜோசப் விஜய் கடந்த மே மாதம் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘எல் நினோ’ போன்ற உலகளாவிய கடல் வெப்ப மாற்றங்கள் நிலவும் ஆண்டுகளில், இந்தியத் துணைக் கண்டத்தின் ஒட்டுமொத்த தென்மேற்கு பருவமழையும் பலவீனமடைகிறது. இது தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களிலும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழையளவை மிகக் கடுமையாகக் குறைத்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடும் வறட்சியை சந்தித்தது. இதனால் கால் நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் வைக்கோல் கட்டு 300 மேல் விலைக்கொடுத்து வாங்கி கால் நடைகளை கைப்பற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் நடந்து முடிந்தத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியை தழுவிய நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தேடியது மட்டுமின்றி சும்மாவே நான் காட்டு காட்டுன்னு காட்டுவேன். இதுல வேற, காட்டு காட்டுன்னு சொன்ன என்ன செய்யுறதுன்னு தெரியல.. என்று ஜோசப் விஜய் சொன்னதும் தமிழக சட்டப்பேரவை வரலாறு காணாத ஒன்று.
மேலும் ஆண்டுதோறும் ஜூன் 12-ல் திறக்கப்படும் தண்ணீர் கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் கிடைக்காத காரணத்தால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டவில்லை. இதனால் குருவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டது. எதைப்பற்றியெல்லாம் முதலமைச்சரும், அமைச்சர்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசாமல் தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று… அதை நாடறிய சொல்லட்டுமா இன்று!.. என பாட்டு பாடியதும்,
எனது மதம் எனக்குக் கற்றுக்கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாது” என உபதேசம் செய்ததும் மட்டுமின்றி மு.க. ஸ்டாலின் லாட்டரி நிறுவனத்திடம் ரூ. 900 கோடி நிதி வாங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் ஆக்கப்பூர்வமாக பேசாமல் வெட்டிக் கதை பேசியதின் விளைவு கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சரியான நேரத்தில் மேட்டூர் அணையைத் திறக்காமல், விவசாயத்தைக் கேள்விக்குறியாக்கியது; விலைவாசி உயரும் வகையில் நிர்வாகத்தை பொறுப்பற்று நடத்தியது என தவெகவின் தோல்வி நிர்வாகத்திற்கான காரணங்களும் நீண்டுகொண்டே வருகின்றன. எனினும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஊதியம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலாக மகிழுந்து வழங்குவது; பல கோடி ரூபாய் செலவு செய்து லண்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு கார் ரேஸ் பார்ப்பது; ரூ.1,200 கோடியில் பிரம்மாண்டமாக புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்கத் திட்டமிடுவது என்பதாகத்தான், விஜய்யின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
உங்கள் அண்ணன் விஜய்… விஜி… வி… அ.. ஆ.. இ.. ஈ… என வசனம் பேசி ஆட்சியைப் பிடித்த இன்றைய முதலமைச்சர் விஜய், பொறுப்பேற்று 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் ஆளும் அரசு மெத்தனமாகச் செயல்பட்டு இன்றுவரை வெற்று அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வருகின்றன. மேலும் அடித்தட்டு மக்களின் அன்றாட உணவான அரிசியின் விலை சுமார் 50 – 60 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சில்லறை மற்றும் மொத்த விற்பனை அங்காடிகளில் அனைத்து வகையான அரிசி வகைகளின் விலையும் கிலோவுக்கு கணிசமாக உயர்ந்துள்ளதால், மாத சம்பளக்காரர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் பட்ஜெட்டைச் சமாளிக்க முடியாமல் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சந்தையில் நிலவும் செயற்கையான விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தவோ, பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவோ அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. மக்கள் விலைவாசி உயர்வால் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது, நிர்வாக திறமையற்ற தவெக அரசு 5 மாதங்களாக வேடிக்கை மட்டுமே பார்ப்பதன் விளைவு இன்று வரலாறு காணாத அரிசி விலைக்கு காரணமாக அமைந்துள்ளது.