நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தவெக மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் என்கிற சதீஷ்குமார், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகியும் மாவட்ட துணைச் செயலாளருமான தில்லை மோகன் என்பவரை ஜாதிப் பெயர் கூறி ஆபாசமாக திட்டிய ஆடியோ கடந்த மாதம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராசிபுரம் காவல் நிலையத்தில் ஜாதிய வன்கொடுமை மற்றும் அவதூறாகப் பேசிய மாவட்டச் செயலாளர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது. மேலும் தவெகட்சியின் கொள்கைக்கு மாறாக ஜாதி வெறியுடன் செயல்பட்ட இவரை உடனடியாகக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனப் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்ட செயலாளர் த. குமரவேல் தலைமையில் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நாமக்கல் நகர காவல் துறையை கண்டித்தும் ஜாதியத்தோடு, ஜாதி சிந்தனையோடு, ஜாதி வெறி கொண்டு பேசிய தவெக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலிவயறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.