நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூர் புதுப்பட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின சமுதாயத்தை சார்ந்த அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியில் மூன்று மேல்நிலை தொட்டிகள் இருக்கின்றன. இந்த மூன்று மேல்நிலை தொட்டிகளில் இரண்டு மாற்று சமுதாயத்தைச் சார்ந்த பகுதிகளில் இருக்கிறது. மற்றொன்று பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய பகுதியில் இருக்கிறது. இந்த மூன்று மேல்நிலைத் தொட்டிகளுக்கும் மாற்று சமுதாயத்தைச் சார்ந்தவர் ஒருவரே மேல்நிலை தொட்டிகளுக்கு நீரேற்றும் வேலையை செய்து வருகிறார்.
மாற்று சமுதாயம் வாழ்ந்து வரக்கூடிய பகுதியில் தொடர்ந்து குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தண்ணீர் அப்பகுதி மேல்நிலைத் தொட்டிகளுக்கு முறையாக தண்ணீர் ஏற்றி வருகிறார் என்றும், பட்டியலின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய பகுதியில் இருக்கக்கூடிய மேல்நிலைத் தொட்டிக்கு முறையாக தண்ணீர் ஏற்றுவது இல்லை.
அப்படியே ஏற்றினாலும் தண்ணீர் திறந்து விடக் கூடிய கேட் வாலை பாதி அளவிற்கு மட்டுமே திறந்து தண்ணீர் குறைப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் பட்டியலின மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு முறையாக தண்ணீர் என்பது மேல்நிலைத் தொட்டிக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை சம்பந்தமாக பலமுறை உள்ளாட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட புதுப்பட்டி பட்டியலின மக்கள் அனைவரும் காலி குடத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். காலி குடத்துடன் போராட்டம் நடத்திய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு நாளை முதல் முறையாக தண்ணீர் வரும் என்று உறுதி அளித்தனர்.

புதுச்சத்திரம் ஒன்றிய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுக்க மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீரை ஏற்றி முறையாக தண்ணீர் வருவது போல அதிகாரிகள் கண் முன்பு ஒரு வகையான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதைப் பார்த்து பொதுமக்களும் சரி இனிமேல் தண்ணீர் வரும் என்று நம்பி இருந்தார்கள். ஆனால் இன்று காலை மீண்டும் பழையபடி தண்ணீர் வராமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அதைத்தொடர்ந்து புதுப்பட்டி பட்டியலின சமுதாய மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகினர்.
அப்போது, மாற்று சமூகத்தில் இருக்கக்கூடிய மேல்நிலைத் தொட்டிகளில் ஒன்று புதிதாக கட்டப்பட்டது. அந்த மேல்நிலை தொட்டியில் இருந்து புதிதாக இணைப்பை கொடுப்பதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரி பைப்புகளை இணைக்கும் பணியை ஆரம்பித்தபோது மாற்று சமுதாய மக்கள் நீங்கள் புதிதாக ஒரு லைனை தேர்வு செய்து பைப் எல்லாம் போட வேண்டாம் நீங்கள் போடுவதாக இருந்தால் பழைய பைப்போடு இணைத்து விடுங்கள் இல்லையென்றால் நாங்கள் போட விட மாட்டோம் என தெரிவித்துள்ளனர். பைப் லைன் இணைக்க வந்த ஊழியர்கள் அதை கைவிட்டுள்ளனர். ஆகையால் அந்த பணியை நாளை முடித்து தருகிறேன் என வட்டார வளர்ச்சி அதிகாரி உத்தரவாதம் கொடுத்து அனுப்பியுள்ளார்.