மேற்கு வங்கத்தை சேர்ந்த பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்த ரேஷ்மா க்ஷேத்ரி என்பவரை பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பிரதிநிதி சஷி ரஞ்சன் மிஸ்ரா காதலித்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இரட்டை மகள்களான ரித்தி மற்றும் சித்தி, மற்றும் 6 வயது மகனான கண்ணு ஆகியோருடன் வசித்து வந்தார். சஷி ரஞ்சன் மிஸ்ரா நீண்ட நாட்களாக தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு வந்தார். இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. எனவே தன் மனைவியைக் கண்காணிக்க வீடு முழுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தியிருக்கிறார்.
எப்போதும் இரண்டு மகள்களையும் சஷி ரஞ்சன் மிஸ்ரா தனது பொறுப்பில் வைத்து வளர்த்து வந்தார். இரண்டு மகள்களும் இருக்கும் அறைக்குள் சஷி ரஞ்சன் மிஸ்ரா தன் மனைவியை விடாமல் தானே வளர்த்து வந்தார். அதோடு மகனை நீ வளர்த்துக்கொள், நான் இரண்டு மகள்களையும் வளர்த்துக் கொள்கிறேன் என்று அடிக்கடி தன் மனைவியிடம் கூறி வந்தார். நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு சஷி ரஞ்சன் மிஸ்ரா தன் மகள்களுடன் தனி அறைக்கு உறங்க சென்றார். நள்ளிரவில் ஒரு முறை எழுந்து ஒரு மகளை பாத்ரூம் அழைத்து சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர்களது வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர்.
காவல்துறையினர் வந்தபிறகுதான் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மகள்களும் கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டு இருந்தது தெரிய வந்தது. சஷி ரஞ்சன் மிஸ்ரா இரண்டு மகள்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தன் மகள்களை கொலை செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் இரண்டு சிறுமிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சஷி ரஞ்சன் மிஸ்ராவைக் கைது செய்தனர்.
இது குறித்து சஷி ரஞ்சன் மிஸ்ரா மனைவி ரேஷ்மா க்ஷேத்ரி கூறுகையில்,” ரேஷ்மா க்ஷேத்ரி பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்த போது சசியை சந்தித்து காதலித்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவன் ஒரு குடிகாரர் என்றும், தன்னை அடிக்கடி உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், உணவு கொடுக்க மறுத்ததாகவும் ரேஷ்மா க்ஷேத்ரி தெரிவித்தார். என்னுடைய கணவனுக்கு மன அழுத்தம் இருந்தது. நள்ளிரவில் ஒரு மகளை பாத்ரூம் அழைத்து சென்ற பிறகு மின் விளக்கை அணைத்துவிட்டார். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் காவல்துறையினர் வந்தனர் என ரேஷ்மா க்ஷேத்ரி தெரிவித்தார்.
காவல்துறையினர் வந்தபிறகுதான் வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு மகள்களும் கழுத்தை அறுத்து கொலை செய்யபட்டு இருந்தது தெரிய வந்தது. சஷி ரஞ்சன் மிஸ்ரா இரண்டு மகள்களையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தன் மகள்களை கொலை செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் சஷி ரஞ்சன் மிஸ்ரா மனைவி ரேஷ்மா க்ஷேத்ரி கூறுகையில்,” ரேஷ்மா க்ஷேத்ரி பியூட்டி பார்லர் ஒன்றில் வேலை செய்த போது சஷி ரஞ்சன் மிஸ்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இவர்கள் 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவர், தனது அறை உட்பட வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருந்ததாகவும், தான் தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்ல முயன்றபோதெல்லாம் தன்னைத் தாக்கியதாகவும் ரேஷ்மா க்ஷேத்ரி குற்றம் சாட்டினார். மேலும், தனது மகள்களைத் தன்னுடன் வைத்துக்கொண்டு, மகனுடன் மட்டும் வீட்டை விட்டு வெளியேறுமாறு அவர் வற்புறுத்தி உள்ளார். ஆனால், இரட்டைக் குழந்தைகளைத் தன்னுடன் செல்ல அனுமதிக்க மறுத்ததால், இறுதியில் ரேஷ்மா க்ஷேத்ரி தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, தன் மகள்களை விட்டுப் பிரிந்திருப்பது கடினமாக இருந்ததால் திரும்பி ரேஷ்மா க்ஷேத்ரி வந்துள்ளார். இருப்பினும், தன் கணவரின் அறைக்குள் நுழைய தன்னை அனுமதிக்கவில்லை என்றும் தனக்கும் இரட்டைக் குழந்தைகளை கொலை செய்வேன் என அடிக்கடி பேசுவார் என்றும் ரேஷ்மா க்ஷேத்ரி குற்றம் சாட்டினார்.