பெங்களூரில் காதலனுடன் திருமணம் செய்யாமல் காதலன் குடும்பம் நடத்திய மகளை தட்டிக்கேட்ட பெற்றோ மற்றும் சகோதரி என 3 பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கர்நாடக மாநிலம் பெங்களூரில் ராமமூர்த்தி நகரை சேர்ந்த கணினி பொறியாளர் சோமசுந்தரம். இவர் இவரது மனைவி முத்துலட்சுமி.
இந்த தம்பதிக்கு ஸ்வேதா மற்றும் சுப்ரியா என்ற இரு மகள்கள் உள்ளனர். கணினி பொறியாளராக உள்ள ஸ்வேதா சீகேஹள்ளி பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் தங்களின் உல்லாச வாழ்க்கைக்கு தேவையான பணத்தை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கியிருந்தார்.
கடந்த இரு மாதங்களாக மகள் வீட்டுக்கு வரவில்லையே என்று கூறி, அவரை பார்க்க பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஸ்வேதா தனது ஆண் நண்பர் கென்னத் என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்ததது தெரியவந்தது. இதை பார்த்து சோமசுந்தரம் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்து மகள் ஸ்வேதாவை கண்டிக்க அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் பெற்றோர் என்றும் பாராமல், ஸ்வேதா தனது காதலனுடன் சேர்ந்து சோமசுந்தரம், முத்துலட்சுமி ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். அதுபோல் தடுக்க வந்த சுப்ரியாவையும் குத்தியுள்ளார். இதில் சுப்ரியாவும், முத்துலட்சுமியும் துடிதுடித்து உயிரிழந்தனர். சோமசுந்தரம் அவர்களிடம் இருந்து தப்பித்து பலத்த காயங்களுடன் வெளியே வந்து உயிருக்கு போராடினார்.
இதற்கிடையே, தனது காதலன் கென்னத்துடன் ஸ்வேதா தப்பினார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சோமசுந்தரந்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெற்ற மகளே தாய் தந்தை மற்றும் சகோதரியையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரை அதிர வைத்தது. தலைமறைவு ஆன ஸ்வேதா மற்றும் அவரது காதலன் கென்னத் ஆகிய இருவரையும் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
ஸ்வேதா திருமணம் செய்யாமல் காதலன் கென்னத்துடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. மகள் திருமணம் செய்யாமல் காதலனுடன் வாழ்வதை அறிந்து அங்கு இளைய மகளுடன் வந்த பெற்றோர் ஸ்வேதாவை கண்டித்ததாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர், தனது காதலனுடன் சேர்ந்து பெற்றோர், தங்கையை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்றதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஸ்வேதா மற்றும் கென்னத்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், பாண்டிசேரி பிரியாணி கடை அருகே நின்று கொண்டு இருந்த ஸ்வேதாவை காவல்துறையினர் விசாரித்தனர். இதில், கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதை ஒப்புக்கொண்டார். தகவல் அறிந்து பாண்டிசேரிவந்த பெங்களூர் கே.எஸ்புரம் காவல்துறையினர் ஸ்வேதாவை கைது செய்து அழைத்து சென்றனர். தலைமறைவாக உள்ள அவரது காதலன் கென்னத்தை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.