ஏன்? சரவணப் பெருமாள் பற்றி கூற வேண்டியுள்ளது… ஊராட்சி பணிகளில் என்ன செய்தார் ? இவர் எந்த ஊராட்சிக்கு பணி மாறுதல் பெற்றாலும் அப்பகுதி மக்கள் மனதில் நீங்காத நின்று இடம் பிடித்து விடும் காரணம் தான் என்னவாக இருக்கும் என்கின்ற நமது பல கேள்விகளுக்கு நமது “இந்தியா ஃபஸ்ட்” மாத இதழின் தேடலில் இவர் குறித்த உண்மை தன்மை அறிந்திட அவர் பணிபுரிந்த தற்சமயம் பணிபுரியும் ஊராட்சி வரை இவர் குறித்தும் இவரின் மக்கள் பணி குறித்தும் மேற்கொண்ட மக்களின் கள ஆய்வில் பல்வேறு சிறந்த தகவல்கள் நமக்கு வரப்பட்டது.
அதன் அடிப்படையில் அவரை நேரில் சந்திக்கிற தருணமும் எதிர்பார்த்து இருந்தோம். முத்தாய்ப்பாக அந்த தருணமும் நமக்கு அமைந்தது. இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ந் தேதி கொடியேற்றி முடித்து நம்மை அடையாளம் கண்டு இன் முகத்தோடு வரவேற்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பணிகள் குறித்து சுவாரஸ்ய தகவல்களோடு பேச துவங்கலானார்.

ஆசிரியர் பட்டையை படிப்பு முடித்த இவர் மக்கள் பணி மகேசன் பணி தான் விரும்பியே இந்த துறையை தேர்வு செய்ததாகவும் ஏழை, எளிய மக்களின் நலனிற்காக அவர் தம் வாழ்வாதாரம் மேலோங்கிடவும் தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டும் என்று அவர் கூறினார். இவர் பணிபுரிந்த நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஊராட்சியில் இவரின் சீரிய முயற்சியில் சாலை சரி செய்தல், மக்களுக்கு பலன் தரக்கூடிய நிழல் தரும் பல்வேறு மரங்கள் நடப்பட்டு இருப்பதையும் ஊராட்சிக்கு வருமானம் தரக்கூடிய அளவில் தென்னை மரங்கள் உருவெடுத்துள்ளது.
வீடு இல்லாத பயனாளிகள் வீடு, வீடாக சென்று தகுதியுடைய அனைவருக்கும் கூரை வீடுகளை கான்கிரீட் கட்டிடங்களாக காட்சி தர பாலமாக இவர் இருந்துள்ளார் என்பதை அப்பகுதி மக்களே மகிழ்ச்சியுடன் இவரின் செயல்பாட்டை நேரில் தெரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இவர் ஊராட்சியின் செயலர் என்பதை தாண்டி ஊராட்சியின் பொது மக்களின் பாதுகாவலர் என்பதே உண்மை என கூறினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரிந்து வந்த சரவணப் பெருமாள் தற்சமயம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த திருக்குவளையில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருகிறார்.
சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்து வந்த சரவணப் பெருமாள் திருக்குவளையிலும் அசத்தி வருகிறார். இவர் பணி புரிந்த இடத்தில் குறிப்பிட வேண்டிய காலத்தால் அழியாத கீழையூர் ஒன்றியத்தை சார்ந்த பால குறிச்சி எனும் ஊராட்சியில் அரசு சுகாதார நிலையத்திற்கான அடிக்கல்லை நிறுவியவர் இவரே. மணி ஓசை அடித்தவர் இவரே “பூனைக்கு யார்? மணிகட்டுவது என்பதைப் போல் இருந்த தருணத்தில் இவரே மணியையும் கட்டினார் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

மேலும் இவரின் “இடைவிடாத முயற்சியின் பயனால் பல நூறு மக்கள் பயன்பெற இவர் உறுதுணையாக இருந்தார் என்றால் மிகையாகாது. மேலும் தற்சமயம் பணிபுரியும் திருக்குவளை ஊராட்சியில் குடிநீர்,, மின்சாரம் ஊராட்சி நிர்வாகம் யாவற்றிலும் குறைபாடுகளின்றி முழு மூச்சா செயல்பட்டு வருகின்றார். ஊரக வளர்ச்சி மூலம் கிராம புற மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு நல திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பதில் முன்கள பணியாளராக உள்ளார்.
எந்த ஊராட்சியில் பணி புரிந்தாலும் ஊராட்சி வளர்ச்சிக்காக சிக்கனமாக செலவிடுதலோடு சேமிப்பு கணக்கில் வரவு வைக்கும் நல்ல மனமுடையவர் சரவணப் பெருமாள் தனது மாத வருமானத்தை சிக்கனமாக பயன்படுத்தி மாணவ, மாணவியர்கள் கல்விக்கு உதவிவரும் இவர் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடிப்போருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.
திருக்குவளையில் பெரும் பகுதிகள் குப்பை கிடங்காக காட்சியளித்தது. தற்போது அவை அனைத்தையும் மாற்றி குப்பை கிடங்கு அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பார்ப்பதற்கே அழகாக நேர்த்தியாக இவர் கட்டமைத்துள்ளார். இதன் மூலமாக இயற்கை சீரழிவு தவிர்க்கப்படுகிறது. மனிதர்களுக்கு நல்ல சுவாசக் காற்றினை பெறுவதற்கு முத்தாய்ப்பாக இந்த வளாகத்தை கட்டமைத்திருப்பது வரவேற்க வேண்டியதே.
திருக்குவளை ஊராட்சி இவர் சீரிய முயற்சி மூலமாக பயணிகள் பேருந்து நிலையம் அருகே பராமரிப்பின்றி இருந்த கழிவறைகளை சுத்தம் செய்து இடிபாடுகளை சரி செய்து பேருந்துக்கு காத்திருப்போர் பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இந்த பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிற கழிவறையினை இப்போது பயன்படுத்துகின்றனர். இத்தனை சாதனை மிகுந்த ஊராட்சி செயலர் சரவணப் பெருமாளை நாமும் நமது “இந்தியா ஃபஸ்ட்” மாத இதழ் சார்பாக நெஞ்சார பாராட்டி ஊராட்சி செயலர் சரவணப் பெருமாளின் பணி மேலும் சிறந்திட வாழ்த்தி நாமும் விடை பெற்றோம்.