பொள்ளாச்சி தெற்கு நகர, திமுக சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் “உதயநிதி ஸ்டாலின்” பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுதபாரதி தலைமையில், 5000 பேருக்கு சமபந்தி விருந்து “சிக்கன் பிரியாணி” ” சிக்கன் வறுவல்” “இனிப்பு கேசரி” ” பழம்” “பீடா” இவை அனைத்தும் கழக முன்னோடி ஐயா மாண்புமிகு முன்னால் அமைச்சர் கண்ணப்பன் அவர்கள் பொதுமக்களுக்கு சமபந்தி “பிரியாணி” விருந்தை துவங்கி வைத்தார்.
அவருடன் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், பொள்ளாச்சி தெற்கு நகர மன்ற செயலாளர் அமுத பாரதி, திப்பம்பட்டி ஆறுசாமி,மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன், பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியமளா நவநீதகிருஷ்ணன், நகர மன்ற துணைச் செயலாளர் தர்மராஜ், நாச்சிமுத்து, பாத்திமா, கழக உடன்பிறப்பு கலந்து கொண்டு சிறப்பித்தார்.