கோயம்புத்தூர் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் போதைப்பொருட்கள் பற்றி புகார் அளித்த விவரத்தை காவல்துறையினர் கொடுத்ததால் கொலை நடந்துள்ளது. கோயம்புத்தூர் கல்லூரி மாணவர் கொலையில் காவல்துறை அலட்சியம்” என சட்டமன்றத்தில் இளைய கலைஞர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டியிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் கஞ்சா விற்பதாக புகார் கொடுத்த மாணவனை சீனியர் மாணவர்கள் உள்பட 20 பேர் கும்பல் கடத்தி கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் அடித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்குவேந்தல் பகுதியை சேர்ந்த கென்னடி- சுமதி தம்பதி மகன் அமுதன். இவர், கோவை மலுமிச்சம்பட்டியிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி 3-ஆம் ஆண்டு மெக்ட்ரானிக்ஸ் படித்து வந்தார்.
இதே கல்லூரியில் தீபக் என்பவர் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். தீபக் பூங்கா நகர் பகுதியில் அறை எடுத்து சக மாணவர்களுடன் தங்கி உள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அமுதன் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் அறை எடுத்து 2-ஆம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவருடன் தங்கினார். இந்நிலையில் அமுதனுக்கும், தீபக்கிற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் அமுதன் தனது நண்பர்கள் 7 பேருடன் தீபக் தங்கியிருந்த அறைக்கு முகமூடி அணிந்து சென்றார்.

அங்கு தீபக் உள்ளிட்டவர்களை சரமாரியாக தாக்கினர். இதில், அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். பின்னர், தீபக்கின் செல்போனை பறித்துக் கொண்டு தப்ப முயன்றபோது அமுதன் அணிந்திருந்த மாஸ்க் கழன்றது. இதில் தீபக் உள்ளிட்டவர்கள் அமுதனை அடையாளம் கண்டு கொண்டனர்.
இந்நிலையில், நேற்று காலை 9 மணி அளவில் அமுதன் தனது நண்பர் ஒருவருடன் கல்லூரிக்கு வந்தார். அப்போது, அங்கு வந்த தீபக் உட்பட 20 பேர் கொண்ட கும்பல் அமுதனை கடத்திச் சென்று அருகில் உள்ள மைதானத்தில் வைத்து கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியும் உள்ளனர். இதில், அவர் மயங்கி விழுந்தார். பின்னர், அமுதனை மீட்டு அவரது அறைக்கு யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்துவிட்டு சென்றனர். அறையில் அமுதன் உடல் எந்தவித அசைவுமின்றி படுத்திருந்தார்.

அப்போது, சக மாணவர்கள் அவர் தூங்குகிறார் என்று நினைத்து கல்லூரிக்கு சென்று விட்டனர். பின்னர், மதியம் அறைக்கு மாணவர்கள் திரும்பியபோது அமுதன் பேச்சு மூச்சின்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அமுதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோயம்புத்தூர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் தெரிந்ததும் அங்கு வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அமுதனின் மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். கல்லூரி மாணவரை சக மாணவர்களே அடித்து கொன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை தொடர்பாக கோவை செட்டிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து, திருவள்ளூர் விபி ரோட்டை சேர்ந்த மாணவர், கடலூர் மாவட்டம் மேற்கு தெருவை சேர்ந்த ஆறாமுதன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த், திருவாரூர் நீடாமங்கலத்தை சேர்ந்த சிவ ரோகித், சாத்தநத்தம் மணி பாலு ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமுதனின் தாய் சுமதி கூறுகையில், “கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எனது மகன், சக மாணவர்கள் போதைப்பொருள் விற்பதாக கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் அளித்திருக்கிறார்.
மாணவர்களை காட்டி கொடுத்த ஆத்திரத்தில் அவர்கள் எனது மகனை தாக்கியுள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் அமுதனை வெளியே தங்குமாறு விடுதியில் இருந்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில் வெளியே நண்பரின் அறையில் தங்கிய அமுதனை புகாரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் வெளியே இருந்த இளைஞர்கள் என 20 பேர் சேர்ந்து அமுதனை சரமாரியாக கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் தாக்கியுள்ளனர்.

இதில், உடல் முழுவதும் படுகாயங்களுடன் அமுதன் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார்” என தெரிவித்தார். தந்தை கென்னடி கூறுகையில், “எனது மகனை படிக்கத்தான் அனுப்பினோம். ஆனால், அதே கல்லூரி மாணவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இதுவரை கல்லூரி நிர்வாகம் எங்களை சந்திக்க வில்லை. அவர்கள் சந்தித்து என் மகன் கொலைக்கான உண்மையான காரணத்தை தெரிவிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்” என தெரிவித்தார்.
கோயம்புத்தூர் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் கஞ்சா விற்பதாக புகார் கொடுத்த எனது மகனை நிர்வாகத்தினர் வெளியே தங்குமாறு விடுதியில் இருந்து அனுப்பி உள்ளனர். வெளியே நண்பரின் அறையில் தங்கிய எனது மகனை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் வெளியே இருந்த இளைஞர்கள் என 20 பேர் கும்பல் கடத்தி கத்தியால் குத்தியும், இரும்பு ராடால் அடித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இளைய கலைஞர் உதயநிதி கோயம்புத்தூர் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். போதைப்பொருட்கள் பற்றி புகார் அளித்தவர் விவரத்தை காவல்துறையினர் கொடுத்ததால் கொலை நடந்துள்ளது. கோயம்புத்தூர் மாணவர் அமுதன் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். கோயம்புத்தூர் கல்லூரி மாணவர் கொலையில் காவல்துறை அலட்சியம்” என சட்டமன்றத்தில் இளைய கலைஞர் உதயநிதி பேசினார்.