21-ஆம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிவேக இணையம் என தொழில்நுட்பம் வேகத்தில் வளர்ந்து உலகை முற்றிலிம் மாற்றினாலும் ஜாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஜாதிச் சான்றிதழ் தொடர்பான சவால்கள், .காதல் திருமணங்களுக்கு எதிரான ஜாதிய ஆணவக் கொலைகள் மற்றும் தேர்தல்களில் ஜாதி வாக்கு வங்கி ஆகியவற்றை பார்க்கும் “இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறாங்க?” என்ற சிலர் கருது, சமூக உறவுகள் மற்றும் நட்புகள் பெரும்பாலும் ஜாதி அடிப்படையிலேயே கட்டமைக்கப்படுக்கின்றன. எனவே, ஜாதி என்பது வெளிப்படையான பாகுபாட்டிலிருந்து, நுட்பமான சமூக மற்றும் மனோபாவ ரீதியான பாகுபாடாக மாறியுள்ளது என்பதே பலரின் கருத்தாகும்.
அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், கர்வா மாவட்டம், லாவா சம்பா பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு தலித் சிறுவன், சில ஆசிரியர்களால் கழிப்பறையை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, தலித் சிறுவன் ஒருவன் கழிவறையைச் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது நாடு முழுவதும் வைரலாகி பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.