விஜய் 30க்கும் மேற்பட்ட படங்களில் குடிகாரனாகவும், புகை பிடிப்பவராகவும் 34 ஆண்டுகள நீங்கள் நடித்ததை பார்த்த ரசிகர்கள் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா CM sir? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அப்பாவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவெக தொடங்கிய நாள் முதல் தமிழ்நாட்டில் தான் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக விஜய் அவர்கள் ஒப்பாரி வைத்து கொண்டே இருந்தார். தனது ஆட்சி அமைந்ததும் 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக நாடகமாடிய விஜய் இப்போது 54 புது ரக மதுபானங்கள் அறிமுகப்படுத்தி, டாஸ்மாக் கடை அருகே பார் திறக்கவும் அரசாணை வெளியிட்டு தமிழ்நாட்டின் இளைஞர்களை 24 மணி நேரமும் மதுவில் குளிக்க வைக்கும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்!
திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “ரேவ் பார்ட்டி” திறக்க அனுமதி தந்து General G என்ற whatsapp group ஆரம்பித்து இளம் ஆண்களும், பெண்களும் சேர்ந்து உயர்ரக வெளிநாட்டு போதைப் பொருட்களை விடிய விடிய (sunset to sunrise) பயன்படுத்த அனுமதித்திருப்பது பெற்றோர்களையும், தமிழ் சமூகத்தையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பது தெரியவில்லையா CM Sir?

30க்கும் மேற்பட்ட படங்களில் குடிகாரனாகவும், புகை பிடிப்பவராகவும் 34 ஆண்டுகள நீங்கள் நடித்ததை பார்த்த ரசிகர்கள் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா CM sir? உங்கள் படம் வெளியான திரையரங்குகளில் சிதறி கிடந்த போதைப்பொருள் இருந்த கவர்ககளே அதற்கு சாட்சி. உங்களைச் சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் போதைப் பொருட்கள் கேரளாவிற்கு கடத்தபடுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று கூறியது வெட்கமாக இல்லையா CM sir?
#காவல்துறையில் உள்ள SBCID, SB Constable, Q Branch, Special division, PEW, Narcotics Intelligence Bureau போன்ற பிரிவினருக்கு தெரியாமல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து விற்பனை செய்ய முடியாது என்றும், தமிழ்நாட்டின் சிறைகளில் தங்கு தடையின்றி பயன்படுத்தவும் முடியாது என்றும் விவரம் அறிந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஆதங்கப்படுவது தெரியுமா CM sir? இந்த சீரழிவுகள் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா CM Sir?” எனஅப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.