Rahul Gandhi: தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவு..!

கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, “இந்தியாவில் சிந்தாந்தப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. அதனால் மோடி அரசு இப்போது வீட்டிற்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோடி அரசு என்று சொன்னாலும், உண்மையில் இது அதானியின் அரசு. காரணம் மோடி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அதானிக்கு தந்துவிட்டார்.

அதானி விரும்பியதால் மும்பை விமான நிலையத்தை வேறு ஒருவரிடம் இருந்து பறித்து அதானிக்கு கொடுத்துவிட்டார். அதானி எதை விரும்பினாலும், மோடி அவருக்கு அதை எளிதாக வாங்கி கொடுத்துவிடுவார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து நான் பேசியதால் என் மீது நடவடிக்கை பாய்ந்தது. எனது எம்.பி பதவி, நான் தங்கி இருந்த வீடு என அனைத்தையும் பறித்தார்கள். அந்த வீடு போனது பற்றிக் கவலை இல்லை. காரணம், நாடு முழுவதும் எனக்கு உங்கள் இதயங்களில் இடம் இருக்கிறது. லட்சக்கணக்கான தமிழர்கள் எனக்காக வீட்டுக் கதவை திறந்து வைப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கும், எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல; குடும்ப உறவாகும்.

ஏன் தமிழ் மொழி, பண்பாடு, வரலாற்றின் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள்? தமிழ்நாட்டுக்கு வந்து தோசை பிடிக்கும் என கூறிவிட்டு, டெல்லிக்கு சென்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவன் என பேசுகிறீர்கள். மோடிக்கு தோசை பிடிக்குமா, வடை பிடிக்குமா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னை இல்லை. தமிழ் மொழி, கலாசாரத்தை பிடிக்குமா என்று கேட்கிறார்கள்.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற, பல நிறுவனங்களை ED, IT போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டி, பணம் பெற்றுள்ளார்கள். இந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் மோடிதான் இதனை செய்கிறார். மேலும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு ஒப்பந்ததைக் கொடுத்து, ரூ.1,000 கோடி அளவிற்கு மிகப்பெரிய நன்கொடையை பாஜக பெறுகிறது. மோடி செய்த ஊழலில் இது சிறு பகுதிதான். இந்த ஊழலை செய்துவிட்டு மோடி தன்னை சுத்தமானவர் என்று அழைத்துக் கொள்கிறார்.

மோடி ஆட்சியில், 22 பெரும் பணக்காரர்கள் 70 கோடி மக்களின் பணத்தை வைத்திருக்கிறார்கள். கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். இந்த பணத்தை வைத்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் விவசாயிகளுக்கு 24 ஆண்டுகளுக்கு ஊதியம் தந்திருக்கலாம்.

கல்வி வழங்கும் பல்கலைக்கழங்களில் வேந்தர்களாக, அரசின் முக்கிய நிர்வாக பொறுப்புகளில், தேர்தல் ஆணையத்தில், நீதித்துறையில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் நிரம்பி இருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று, மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனை உடனடியாக தடுத்தாக வேண்டும்.

சமூக நீதியை பொறுத்தவரை ஸ்டாலின் தெளிவாக கூறியிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும், இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருக்கும் 50 விழுக்காடு உச்சவரம்பை நீக்குவோம். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக எடுப்போம். இந்தியாவில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக அந்த பணியிடங்களை நிரப்பி, வேலைவாய்ப்பின்மையை முற்றிலும் நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்வோம். சமூக நீதியை உயிர் மூச்சாகக் கொள்வோம்! கோவையில் வீசும் காற்று, விரைவில் புயலாக மாறும். அந்தபுயல் அதானிகளை, மோடிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எரியும்!” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi: இந்தியாவின் ஒற்றுமைப் பயணத்தை தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறோம்…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் I.N.D.I.A. கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது. எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன். தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற எந்த மொழிகளை விட தமிழ் ஒன்றும் குறைந்தது இல்லை. தமிழ் என்பது மொழி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவேபார்க்கிறேன்.

மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்.
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம்.
அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.
பிரதமர் மோடி மீனவர்களை மறந்துவிட்டார். விவசாயிகளைப் போல மீனவர்களும் முக்கியமானவர்களே.
உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது என ராகுல் காந்தி பேசினார்.

Rahul Gandhi: அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன்மூலம் வரலாற்றை மாற்ற முடியாது…!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளன. பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடாத நிலையில், பெண்கள், இளைஞர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ன. அதன் 25 முக்கிய அம்சங்களுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்றும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரானதாக உள்ளது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடிகொடுத்துள்ளார்.

இதையடுத்து, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகாரளித்தது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.

நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும். ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டவர்கள் யார் என்பதும் நமக்கு தெரியும். அரசியல் தளங்களில் இருந்து பொய்களை அள்ளி வீசுவதன்மூலம் வரலாற்றை மாற்ற முடியாது” என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி: ‘மேட்ச் பிக்ஸிங்’கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்…!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், கேஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனும் சிறையில் இருந்தாலும் மனதளவில் நம்மோடுதான் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை மிரட்டியோ வெற்றிபெற்றால் அதை ‘மேட்ச் பிக்ஸிங்’என்கின்றனர்.

இப்போது மக்களவை தேர்தல் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இதில் ‘மேட்ச் பிக்ஸிங்’கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இண்டியா கூட்டணியை சேர்ந்த 2 தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கின்றன. இவை அனைத்துமே ‘மேட்ச் பிக்ஸிங்’தான். இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்கவும் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கவும் பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறது.

“தேர்தல் களத்தில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றிபெற நினைக்கிறார். மேட்ச் பிக்சிங் மூலம் பாஜக வெற்றி பெறும்போது நமது அரசியலமைப்பு முடிவுக்கு வந்துவிடும். எங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. 6 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அப்போதே செய்திருக்க வேண்டியதுதானே. தேர்தலுக்கு முன்பாவது செய்திருக்கலாமே.. இரண்டு முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பாஜக ஒருவேளை வெற்றி பெற்று அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால், நாடு முழுவதும் தீ பற்றி எரியும்.

இந்த தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல். இந்த தேர்தலை பாஜக நியாயமாக சந்தித்தால் 180 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெறும். தேர்தலில் எதிர்க்கட்சியினரை போட்டியிடாமல் இருக்க வைப்பதே பாஜகவின் திட்டம்” என ராகுல் காந்தி பேசினார். என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விருதுகளை பாதையில் வைத்து சென்றார்..! பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி யெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், வீரர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

நிலைமையை சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்ம விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறினார்.

அதேபோல கடந்த 22-ம் தேதி, பிரதமரிடம் விருதை ஒப்படைக்க டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். ஆனால் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், பிரதமரின் வீட்டு வாசலிலேயே அவர் விருதை வைத்துவிட்டு திரும்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக விரேந்திர சிங்கும் தனது விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சனிக்கிழமை தனது கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை திருப்பித் தர பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற போது டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், விருதுகளை கடமைப் பாதையின் நடுவில் வைத்து விட்டுச் சென்றார். முன்னதாக செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடிக்கு போகத் எழுதிய கடிதத்தில், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்காததை வெளிப்படுத்தும் விதமாக தனது கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை அரசுக்கு திருப்பி தரப்போவதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதை முதன்மையானது. விருதுகள் மற்றும் மரியாதைகள் எல்லாம் அதற்கு பின்னர்தான். இன்று பாகுபலியாக சொல்லப்பட்ட ஒருவரிடம் பெற்ற அரசியல் ஆதாயம், இந்த தைரியமான மகளின் கண்ணீரை விட பெரியதா? பிரதமர் இந்த தேசத்தின் காவலர். அவர் இதுபோன்ற கொடுமைகளில் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“பாரத் நியாய் யாத்திரை”.. தொடங்கும் ராகுல் காந்தி..!!

மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி பேருந்து மூலம் யாத்திரை தொடங்குகிறார். இது தொடர்பாக ராகுல் காந்தி வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து மும்பை வரை அதாவது 6,200 கிலோ மீட்டர் தூரம் யாத்திரை மேற்கொள்ளவுள்ளார் என காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14-ம் தேதி தொடங்கும் பாரத் நியாய் யாத்திரையை 6200 கி.மீ. பயணித்து ராகுல் காந்தி மார்ச் 20-ல் நிறைவு செய்கிறார். “பாரத் நியாய் யாத்திரை” என்று பெயரிடப்பட்டுள்ள யாத்திரை மூலம் 14 மாநிலங்கள் வழியாக ராகுல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற உள்ள “பாரத் நியாய் யாத்திரை” 66 நாட்கள் பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் வழியாகவும், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக பேருந்தில் ராகுல் காந்தி பயணம் செய்யவுள்ளார். பேருந்து மூலம் 85 மாவட்டங்கள் வழியாக பயணித்து ராகுல் காந்தி மக்களை சந்திக்கிறார்.

மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் ராகுல்காந்தி..!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வி யெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், வீரர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

நிலைமையை சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தனது பத்ம விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறினார்.

அதேபோல கடந்த 22ம் தேதி, பிரதமரிடம் விருதை ஒப்படைக்க டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். ஆனால் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், பிரதமரின் வீட்டு வாசலிலேயே அவர் விருதை வைத்துவிட்டு திரும்பிவிட்டார். இதன் தொடர்ச்சியாக விரேந்திர சிங்கும் தனது விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் மண்ணை பாசனம் செய்த பிறகு, ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார்.

இன்று, அவர் ஜஜ்ஜாரின் சாரா கிராமத்தில் உள்ள சகோதரர் வீரேந்திர ஆர்யாவின் அரங்கை அடைந்து, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர்களுடன் கலந்துரையாடினார். ஒரே ஒரு கேள்வி – இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால், அவர்களின் குழந்தைகளை இந்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள்?

இவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேரடியானவர்கள், எளிமையானவர்கள், மூவர்ணக் கொடிக்கு சேவை செய்யட்டும். அவர்கள் முழு மரியாதையுடனும் மரியாதையுடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் ராகுல்காந்தி மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்யும் பயிற்சி மேற்கொண்டார்.

விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்யும் பாஜக அரசுக்கு குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணமில்லையா…!?

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் “குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 142 குழந்தைகள் சேர்க்கப்பட்டன. அவர்களில் 42 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் ஆகியவை உள்ளன. இவர்கள் அண்டை மாவட்டங்களான ஹிங்கோலி, பர்பானி, வாஷிம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் 16 பேர் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த 31 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை கடுமையாகக் கண்டித்தது மட்டுமின்றி பாஜக அரசு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதாகவும், ஆனால், குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க பணம் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி: ஆதிவாசிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தகுதி நீக்க அறிவிப்பை திரும்ப பெற்றதால், மீண்டும் எம்பி ஆக பொறுப்பேற்ற ராகுல் காந்தி , முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு நேற்று வந்தடைந்தார். நாளில் ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தின் புதிய மின் கட்டமைப்பு சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பழங்குடிகளே நாட்டின் அசலான உரிமையாளர்கள். அவர்களைக் குறிக்க ஆதிவாசி என்றொரு வார்த்தை இருக்கிறது. அதன் அர்த்தம் நிலத்தின் அசல் உரிமையாளர்கள் என்பதாகும். அந்த வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஞானத்தின் அடையாளம். அது நாம் வாழும் இந்த பூமியின் மீதான புரிதலின் வெளிப்பாடு, நமது பூமி மீது நாம் கொண்டிருக்கும் உறவினை சுட்டிக்காட்டுவது. ஆதிவாசி எனும் வார்த்தை நமது பழங்குடியின சகோதர, சகோதரிகள் தான் தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள உதவுகிறது.

அதனால் உண்மையான உரிமையாளர்களுக்கு நிலத்தின், வனத்தின் மீதான உரிமையை வழங்க வேண்டும். அவர்கள் விரும்பியதை செய்யும் உரிமையையும் வழங்க வேண்டும். இந்த மண்ணின் அசல் உரிமையாளர்கள் என்ற வகையில் உங்களின் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டுமா? மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆக வேண்டுமா? அல்லது தொழில் முனைவோராக வர வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதேவேளையில் வனத்தின் மீது உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. வனத்திலிருந்து விளைவிக்கும் பொருட்களுக்கான உரிமை உங்களுடையது.

ஆனால் சிலர் உங்களை ‘வனவாசி’ என்று அழைக்கிறார்கள். வனவாசி என்ற சொல், இந்தியாவின் அசல் உரிமையாளர்கள் நீங்கள் என்ற உரிமையை மறுக்கிறது. அது உங்களை கட்டுப்படுத்துகிறது. வனவாசி என்ற சொல்லின் பின்னால் இருக்கும் அர்த்தம், நீங்கள் வனத்தினுள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுருக்குகிறது. இதை ஏற்பதற்கில்லை. இந்த சொல் உங்களின் வரலாற்றை சிதைக்கிறது. உங்களின் பாரம்பரியம் மற்றும் நாட்டுடன் உங்களது உறவை சிதைக்கிறது.

ஆனால் எங்களுக்கு நீங்கள் ஆதிவாசி தான். உங்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம். உதாரணத்துக்கு இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு என்பது ஒரு பேஷன் வார்த்தையாகிவிட்டது. ஆனால் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிவாசிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிப் பேசி நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.

ஆதிவாசிகளிடமிருந்து வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மட்டுமல்ல ஒருவருக்கொருவர் எப்படி அணுகுவது, எப்படி மதிப்பது என்பதைக் கூட கற்றுக் கொள்ள முடியும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எப்போதும் உற்ற துணையாக இருப்போம்” என தெரிவித்தார்.

“தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி”

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்பி., ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மோடி சமூகத்தினர் குறித்து தவறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், சூரத் நீதிமன்றம் இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதன் பேரில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால், அவர் எம்பி பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் வாயநாடு எம்பி. யாக பொறுப்பு ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு சென்றார். மீண்டும் பதவி ஏற்ற பின் அவர் முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று செல்கிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக பகல் 12 மணியளவில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் எனும் ஊட்டி அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த நிகழ்வில் பங்கேற்றார். அங்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்தித்து, அவருடன் தேநீர் அருந்தினார். அங்கு, நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு கூடலூர் செல்லும் வழியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் முத்தநாடு மந்துக்கு மதியம் 1 மணியளவில் சென்றார். அங்கு வந்த அவரை தோடரின மக்கள் தலைவர் மந்தேஷ்குட்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பொன்தோஸ், தமிழ்நாடு காங்கிரஸ் பழங்குடியினர் பிரிவு மாநில தலைவர் ப்ரியா நாஷ்மிகர் மற்றும் தோடரின மக்கள் தங்களது பாரம்பரிய சால்வை அணிவித்து வரவேற்றனர்.

முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன் போ மற்றும் அடையாள் ஓவ் கோயில்களை பார்வையிட்டார். அந்த கோயில்களின் பராம்பரியம் குறித்து ராகுல் காந்திக்கு கோயில் பூசாரி விளக்கினார். பின்னர், தோடர் இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கியதை கண்டுகளித்து, தோடரின மக்களுடன் நடனமாடினார். பெண்களுடன் நடனமாடிய ராகுல் அங்கிருந்த சிறு குழந்தையை தூக்கி முத்தம் கொடுத்து கொஞ்சினார். மேலும் அரவேணு பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த விவசாய பெண்களிடம் நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்தார்.

சுமார் அரை மணி நேரம் அங்கு செலவிட்ட ராகுல் காந்தி, அங்கிருந்து வயநாடு புறப்படும் போது, அவரது பயணம் குறித்து கேட்டதற்கு, ‘நான் பழங்குடியின மக்களை நேசிக்கிறேன். அவர்களை சந்தித்தது இனிமையான தருணம்’ என்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் வயநாடு புறப்ட்டுச் சென்றார். ராகுல் காந்தி வருகையையொட்டி முந்தநாடு மந்தில் பலத்த பாதுகாப்பு பணியில் நீலகிரி காவல்துறையினர் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோடோ யாத்ராவின் ஒரு பகுதியாக கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டார். தற்போது இரண்டாம் முறையாக நீலகிரி மாவட்டத்துக்கு வந்ததால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் கோயம்புத்தூரிலிருந்து கார் மூலம் கோத்தகிரி மார்கமாக வந்தார். அவருக்கு அரவேணு பகுதியில் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மக்களை கண்டதும் வாகனத்திலிருந்து இறங்கி அவர்களுடன் கைக்குலுக்கி பேசினார். உற்சாகமடைந்த பெண்கள் ‘வருங்கால பிரதமர் ராகுல் காந்தி’ என கோஷம் எழுப்பினர். அங்கிருந்து உதகை வந்தவருக்கு சேரிங்கிராஸ் பகுதியில் உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.