ஹரியானா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி…! பிரதமர் நரேந்திர மோடியின் கடவுள் அதானி..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, அம்பாலா, நாராயண்கார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கொள்கை ரீதியான மோதல் நடக்கிறது. ஒரு புறம் நீதி, இன்னொருபுறம் அநீதி. மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும் போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டி வருகிறது. சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் புயல் போல் வெளியேறுகிறது.

அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். பிரதமர் மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் மோடி செய்கிறார்.

மும்பை விமான நிலையம் வேண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும், காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை, விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் அவருக்கு மோடி தருகிறார்’’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி: சாமானியர்கள் வாழ்வதற்கே போராட்டம்..! அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொடுக்கிறது..!

ஹரியானா சட்டபேரவை தேர்தலையொட்டி, அம்பாலா, நாராயண்கார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது,‘‘ காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கொள்கை ரீதியான மோதல் நடக்கிறது. ஒரு புறம் நீதி, இன்னொருபுறம் அநீதி. மோடி தலைமையிலான பாஜக அரசு தொழிலதிபர்களுக்காக வேலை பார்க்கிறது. சாமானியர்கள் வாழ்வதற்கே போராடும் போது அதானியின் வங்கி கணக்கில் சுனாமி போல் பணம் கொட்டி வருகிறது. சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் புயல் போல் வெளியேறுகிறது.

அரசின் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் அதானிக்கு செல்கிறது. பதிலுக்கு மோடியும், பாஜகவும் அதானியிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுகின்றன. அதானி தனது நண்பர் மோடியின் முகத்தை 24 மணி நேரமும் பல செய்தி சேனல்களில் காட்டுகிறார். பிரதமர் மோடியின் கடவுள் அதானி. அதானி என்ன சொன்னாலும் மோடி செய்கிறார்.

மும்பை விமான நிலையம் வேண்டும், இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் வணிகம் வேண்டும், காஷ்மீரில் ஆப்பிள் – வால்நட் வணிகம் தேவை, விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவை என அதானி எதையெல்லாம் கேட்டாரோ அவை அனைத்தையும் அவருக்கு மோடி தருகிறார்’’ என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட 3 சூப்பர் கம்ப்யூட்டர்களை அர்ப்பணித்த நரேந்திர மோடி..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரூ.130 கோடி மதிப்பிலான 3 பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டர்களை, புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு பயன்பாடுகளுக்காக அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய நரேந்திர மோடி, ‘‘இந்த 3 சூப்பர் கம்ப்யூட்டர்களும் இயற்பியல் முதல் புவி அறிவியல் வரை மற்றும் அண்டவியல் ஆய்வுகளை மிக விரிவாக மேற்கொள்ள உதவும். இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகம் எதிர்கால உலகு பற்றி இதில்தான் கவனம் செலுத்துகின்றன. தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் திறனை நேரடியாகச் சார்ந்திராத எந்த துறையுமே இன்று இல்லை என தெரிவித்தார்.

மேலும் பேசுகையில், இது தொழில்துறை 4.0-ல் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய அடிப்படையாக அமைந்துள்ளது’’. இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் திட்டத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த மூன்றும் புனே, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் அறிவியல் ஆய்வுக்காக வைக்கப்படும். இதுபோல், ரூ.850 கோடி மதிப்பில், தட்டவெப்பம், சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்ட உயர் திறன் கம்ப்யூட்டர்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Derek O’Brien: வௌிநாடுகளுக்கு போகும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா..!?

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக். ஓ. பிரையன் நரேந்திர மோடியின் வௌிநாடு பயணம் பற்றி கேள்வி எழுப்பி உள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக். ஓ. பிரையன் எக்ஸ் பக்கத்தில், “கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அங்கு இன்னும் அவ்வப்போது இனக்கலவரம் நடந்து வருகிறது. கடல்பறவையான ஆர்க்டிக் டெர்ன் இனத்தை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா உள்ளிட்ட வௌிநாடுகளுக்கு சென்று வருகிறார்.

ஆனால் ஓராண்டை கடந்தும் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு செல்ல நரேந்திர மோடிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லையா?” என டெரிக். ஓ. பிரையன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Rahul Gandhi: பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம்..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம். என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர், சூரன்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை. நாடு முழுவதும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மட்டுமே வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிறது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்பைப் பரப்புவதுதான். வெறுப்புக்கு பதில் வெறுப்பு அல்ல, அன்பைக் கொண்டு வெறுப்பை வெல்லலாம்; பிரதமர் நரேந்திர மோடியின் உளவியலை நாம் அன்பினால் உடைத்துள்ளோம்.

எதிர்க்கட்சிகள் எதைச் செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்து வருகிறோம். மோடி அரசு மக்கள் விரோத சட்டத்தை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அவர்கள் முன் நிற்பதால் யு டர்ன் எடுக்கிறார்கள். புதிய சட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே காங்கிரசின் முதன்மையான கோரிக்கை. நாம் வலுவாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் எதை செய்ய நினைக்கிறதோ அதுதான் நடக்கிறது என ராகுல்காந்தி தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: ஆர்எஸ்எஸ் தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா?

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவரான நீங்கள், தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா? கேள்வியெழுப்பினார்.

டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜன்தா கி அதலாட் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம் மற்றும் தண்ணீரை நாங்கள் இலவசமாக்கினோம். மக்களுக்கான சிகிச்சையை இலவசமாக்கினோம், சிறந்த கல்வியை வழங்கினோம்.

மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால், எங்களின் நேர்மையின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினார் பிரதமர் மோடி. அதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நேர்மையற்றவர்கள் என்று நிரூபித்து அவர்களைச் சிறையில் அடைக்க சதித்திட்டம் தீட்டினார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களால் காயமடைந்ததால் நான் பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு மரியாதையை மட்டும்தான் நான் சம்பாதித்தேன்; பணத்தை அல்ல. ஊழலில் ஈடுபடவோ, முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஒரு தலைவராக நான் சொல்லிக்கொண்டது இல்லை. இன்னும் சில நாட்களில் நான் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து வெளியேறி விடுவேன். எனக்கென ஒரு வீடுகூட இல்லை. இந்த பத்தாண்டுகளில் நான் அன்பை மட்டும் தான் சம்பாத்தித்துள்ளேன்.

அதனால் தான் பலர் தங்களின் வீடுகளை எடுத்துக்கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நவராத்திரி தொடங்கியதும் முதலமைச்சர் வீட்டில் இருந்து வெளியேறி உங்களில் ஒருவனாக வாழப்போகிறேன்.” என அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத்-க்கு, ஐந்து கேள்விகளை முன்வைத்தார்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம், மற்ற கட்சிகளை உடைப்பது, அரசாங்கங்களைக் கவிழ்ப்பது ஆகிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஊழல் தலைவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியால் விமர்சிக்கப்பட்ட பலர், பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். இத்தகைய அரசியலை நீங்கள் ஏற்கிறீர்களா? பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவரான நீங்கள், தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா? வயது வரம்பு விஷயத்தை கருத்தில் கொண்டு, எல்.கே. அத்வானிக்கு ஓய்வு கொடுத்ததைப் போல் நரேந்திர மோடிக்கும் ஓய்வு கொடுக்கப்படுமா? பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தற்போது கட்சிக்கு தேவையில்லை என்று கூறியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வியெழுப்பினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்: வயது காரணமாக எல்.கே. அத்வானிக்கு ஓய்வு..! நரேந்திர மோடிக்கும் ஓய்வு கொடுக்கப்படுமா..!?

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வயது வரம்பு விஷயத்தை கருத்தில் கொண்டு, எல்.கே. அத்வானிக்கு ஓய்வு கொடுத்ததைப் போல் நரேந்திர மோடிக்கும் ஓய்வு கொடுக்கப்படுமா? கேள்வியெழுப்பினார்.

டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜன்தா கி அதலாட் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம் மற்றும் தண்ணீரை நாங்கள் இலவசமாக்கினோம். மக்களுக்கான சிகிச்சையை இலவசமாக்கினோம், சிறந்த கல்வியை வழங்கினோம்.

மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றால், எங்களின் நேர்மையின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்று நினைக்கத் தொடங்கினார் பிரதமர் மோடி. அதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நேர்மையற்றவர்கள் என்று நிரூபித்து அவர்களைச் சிறையில் அடைக்க சதித்திட்டம் தீட்டினார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களால் காயமடைந்ததால் நான் பதவியை ராஜினாமா செய்தேன். இங்கு மரியாதையை மட்டும்தான் நான் சம்பாதித்தேன்; பணத்தை அல்ல. ஊழலில் ஈடுபடவோ, முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகளால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஒரு தலைவராக நான் சொல்லிக்கொண்டது இல்லை. இன்னும் சில நாட்களில் நான் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து வெளியேறி விடுவேன். எனக்கென ஒரு வீடுகூட இல்லை. இந்த பத்தாண்டுகளில் நான் அன்பை மட்டும் தான் சம்பாத்தித்துள்ளேன்.

அதனால் தான் பலர் தங்களின் வீடுகளை எடுத்துக்கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நவராத்திரி தொடங்கியதும் முதலமைச்சர் வீட்டில் இருந்து வெளியேறி உங்களில் ஒருவனாக வாழப்போகிறேன்.” என அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத்-க்கு, ஐந்து கேள்விகளை முன்வைத்தார்.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம், மற்ற கட்சிகளை உடைப்பது, அரசாங்கங்களைக் கவிழ்ப்பது ஆகிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் சரி என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஊழல் தலைவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியால் விமர்சிக்கப்பட்ட பலர், பாஜகவில் சேர்ந்துள்ளார்கள். இத்தகைய அரசியலை நீங்கள் ஏற்கிறீர்களா? பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவரான நீங்கள், தவறான செயல்களில் இருந்து பிரதமர் மோடியை தடுத்தீர்களா? வயது வரம்பு விஷயத்தை கருத்தில் கொண்டு, எல்.கே. அத்வானிக்கு ஓய்வு கொடுத்ததைப் போல் நரேந்திர மோடிக்கும் ஓய்வு கொடுக்கப்படுமா? பாஜகவின் தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா, சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் தற்போது கட்சிக்கு தேவையில்லை என்று கூறியபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வியெழுப்பினார்.

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 5,000 க்கும் அன்னதானம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலி NLC நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின் கூட்டமைப்பு சார்பில்  நெய்வேலி NLC தலைமை அலுவலகம் எதிரில் உள்ள அய்யனார் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நெய்வேலி பாஜக பிரமுகரும் வீடு, நிலம் கொடுத்து  பாதிக்கப்பட்ட கூட்டமைப்பின் அமைப்பாளர்  வீர வன்னிய ராஜா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக NLC செயல் இயக்குனர் அன்புசெழியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் சுமார் 5,0000 க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாஜக ஓபிசி பிரிவு  மாநில தலைவர் சாய் சுரேஷ், பாஜக மாவட்ட தலைவர் கோவிலானூர் மணிகண்டன்,  தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராமலிங்கம், தேச பக்த இயக்கம் நிறுவன தலைவர் வீராசாமி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரவண சுந்தரம், தாமரை மணிகண்டன், கோபாலகிருஷ்ணன், ஓபிசி அணி தலைவர் தவபாலன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், என்எல்சி பிம்எஸ் சங்க அமைப்பு செயலாளர் நாகராஜ், பொருளாளர் விமல்ராஜ், கான்ட்ராக்ட் சங்க பொதுச்செயலாளர் விக்னேஸ்வரன், தலைவர் அருள்முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் தயாநிதி, நகர தலைவர் மணிகண்டன், வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின் பிரதிநிதிகள் ராம் பிரசாத், காமராஜ், பாஜக வழக்கறிஞர் சிவகுருநாதன், ஆதிபராசக்தி மகளிர் அணி பொறுப்பாளர் கல்யாணி, பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், NLC அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள்,வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டடோர் நலச்சங்ககளின்  பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Narendra Modi: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது..!

“மூன்று பெரிய துறைமுகங்கள், பதினேழு சிறு துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கடல்சார் வணிகத்தின் முக்கிய மையம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்த நிகழ்ச்சி குறிக்கிறது.

தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி. துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது.

புதிய முனையம், துறைமுகத்தில் தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும். முனையத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று, பாலின பன்முகத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பு. இதன் ஊழியர்களில் 40% பெண்கள். இது கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழக கடலோரப் பகுதிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்களுடன், தமிழக கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க, வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்க, இந்தியா ரூ. 7,000 கோடிக்கு மேல் முதலீடு செய்கிறது.

நிலையான மற்றும் முன்னோக்கு சிந்தனை வளர்ச்சிக்கான பாதையை இந்தியா உலகுக்குக் காட்டுகிறது. வ.உ.சி துறைமுகம் ஒரு பசுமை ஹைட்ரஜன் மையமாகவும், கடல் காற்றாலை மின்சக்திக்கான நோடல் துறைமுகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் உலகளாவிய சவால்களை சமாளிப்பதில் இந்த முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

சாலைகள், நெடுஞ்சாலைகள், நீர்வழிகள் மற்றும் வான்வழிகள் ஆகியவற்றின் பரந்த வலைப்பின்னலுடன், இந்தியா தற்போது நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு முக்கியப் பங்குதாரராக மாறி வருகிறது. இந்த வளர்ந்து வரும் திறன், நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகும். இந்த உத்வேகம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும். இந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

70 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை..!

70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்  ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்பெறும் பல குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் கூடுதலாக வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு டாப்-அப் செய்து கொள்ளலாம்” என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 4.5 கோடி குடும்பங்களில் உள்ள ஆறு கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான மூத்த குடிமக்களுக்கு இதற்கென பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.