தொல் திருமாவளவன்: எல். முருகன் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை…!

எல்.முருகன் அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை, ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை தொல் திருமாவளவன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே, RSS அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு RSS காரர். படித்த காலத்தில் இருந்தே RSS தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில் RSS அமைப்பை சேர்ந்தவராகவேதான் ஈடுபட்டார். அவர் ஒருபோதும் தன்னை அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது இல்லை.

அருந்ததியரின் இடஒதுக்கீட்டுக்காக எந்தவொரு போராட்டத்திலும் அவர் பங்கெடுத்ததில்லை. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள அருந்ததியர்களுக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் விசிக தொடக்க காலத்தில் இருந்தே அருந்ததியர் இடஒதுக்கீட்டுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. விசிக ஆதரித்துதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடே கிடைத்தது.

உச்ச நீதிமன்றத்தில் விசிக தொடுத்த வழக்கு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து அல்ல. அவர்களுக்கு எதிரானதும் அல்ல. ஆனால் விசிகவில் அருந்ததியர்கள் அதிகம் உள்ளனர் என்பதால், பொறாமை கொண்டு அவர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் செய்கிற சதித்திட்டம் இது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி அவதூறு பரப்புவது என்பது அநாகரிகமான அரசியலாகும் என தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

அஸ்வத்தாமன்: எல்.முருகன் சட்டம் பயின்றவர்..! திருமாவளவன் மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றவர்..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

எல்.முருகன்: இது 1967 இல்லை…! மொழி அரசியல் இனி எடுபடாது..!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மொழியை வைத்து மக்களை இனி ஏமாற்ற முடியாது என தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான்.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில் கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக பிரதமர் மோடி இருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக – இண்டியா கூட்டணி செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் CBSC பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன் சவால்: திமுக அரசு இந்தி பாடமாக உள்ள பள்ளிகளை இழுத்து மூட தயாரா..!?

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு எல்.முருகன் பதிலளித்தார். அப்போது, ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியது, முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் செயல். ‘இந்தி வாரம்’ என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் வழக்கமாக கடைபிடிக்கப்படுவதுதான்.

மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் இருந்தபோதும், அதில் திமுக அமைச்சர்கள் இருந்ததுறைகளில் கூட இந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. தமிழை பாதுகாப்பதிலும், உலக அளவில் எடுத்துச் செல்வதிலும் முதன்மையாக பிரதமர் மோடி இருக்கிறார்.

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குழந்தைகள் செய்தது தவறு. அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்க, அதில் ஆளுநரை சம்பந்தப்படுத்துவது, எந்த விதத்திலும் நியாயம், தர்மம் அல்ல. அவர் ஒரு சிறப்பு அழைப்பாளராக மட்டுமே அந்த விழாவில் கலந்து கொண்டார்.

மேலும், மழை, வெள்ளத்தை சமாளிக்கதிமுக அரசு சரியாக திட்டமிடவில்லை. ஒருநாள் மழையையே சரியாக கையாளவில்லை. இதில் இருந்து மக்களை திசைதிருப்ப, அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக – இண்டியா கூட்டணி செயல்படுகிறது. மொழியை வைத்து ஏமாற்ற இது 1967 இல்லை. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர்.

‘இந்தி வாரம்’ நடத்த கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என்று கூறி, அப்பள்ளிகளை இழுத்து மூட தயாரா, எனவே மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது. திமுக ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட்டு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எல்.முருகன் தெரிவித்தார்.

தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்..!

கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அதன்பின்னர், எல்.முருகன் நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது எல்.முருகன் பேசுகையில், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம். கைத்தறி பாதுகாப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து தெரிவித்துள்ளீர்கள். இது தொடர்பாக ஜவுளித் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும்.

மித்ரா என கூறப்படும் மெகா 7 ஜவுளி பூங்காவை மோடி கொடுத்துள்ளார். அதில் ஒன்றை விருதுநகர் மாவட்டத்தில் அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் இங்கிருந்து ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இப்பகுதியின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் பொருளாதார மும் உயரும்.

கைத்தறியில் 70 சதவீத மானியத்தில் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஜவுளி தொழில் அந்நிய செலவாணியை ஈட்டித்தருகிறது. 2047-ல் நாம் உலகத்துக்கு வழிகாட்டும் நாடாக இருக்கவேண்டும் என மோடி குறிப்பிட்டுள்ளார். அதற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்படு வோம் என எல்.முருகன் தெரிவித்தார்.

எல்.முருகன்: திமுகவிக்கு தேர்தல் வரும்போது தக்க பாடம் புகட்டுவார்கள்..!

இந்து மதத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவர்கள் அவமதிக்கிறார்கள். அவ்வாறு அவமதித்த ஒருவரை துணை முதல்வராக்கி இருக்கிறார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வரும்போது தக்க பாடம் புகட்டுவார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சனாதன தர்மத்தை கடுமையாக எதிர்த்த ஒருவர் துணை முதலமைச்சர் எனும் முக்கிய பொறுப்புக்கு வந்திருப்பதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த எல். முருகன், “திமுக எப்போதுமே சனாதன தர்மத்துக்கு எதிரானது. கோயில்களுக்கு எதிரானது. எனவேதான், தமிழ்நாடு அரசு கோயில் நிர்வாகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்து மதத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவர்கள் அவமதிக்கிறார்கள். அவ்வாறு அவமதித்த ஒருவரை துணை முதல்வராக்கி இருக்கிறார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வரும்போது தக்க பாடம் புகட்டுவார்கள்.” என எல்.முருகன் தெரிவித்தார்.

L. முருகன் வேண்டுகோள்: சபர்மதி ஆற்றை போல் சென்னை கூவம் ஆற்றை சீரமைக்க வேண்டும்..!

குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் L. முருகன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய இணை அமைச்சர் L. முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூவத்தை சீரமைப்பதற்கு பெரிய திட்டம் வேண்டும். குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலில் கூவத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றிவிட்டு அதன் அளவை உறுதிபடுத்த வேண்டும். அதன் பின்பு ஆற்றை தூர் வாரி, சீரமைக்க வேண்டும் என L. முருகன் தெரிவித்தார் .

இளைஞரின் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு L. முருகன் ஆறுதல்..!

திருநெல்வேலியை அடுத்த பெருமாள்புரம் பகுதியில் இளைஞரை வழிமறித்த கும்பல், அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பூணூல் அறுப்பு சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டிற்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில், இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் உண்மை இல்லை என தகவல் அப்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் தவறான தகவலை பரப்பி வருவதாக திருநெல்வேலி மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெருவில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்ததாகவும், வீடியோவில் இளைஞர் கூறியது போன்ற எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

L. முருகன் விமர்சனம்: கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் L. முருகன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகனுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்ட தலைவர் சென்ன கேசவன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை L. முருகன் சந்திததார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயர், துணை முதலமைச்சராக இருக்கும்போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார். அவர் தற்போது முதலமைச்சராக உள்ளார். ஆனால் கூவம் நதிக்கு ஒதுக்கிய பணத்தை கூவத்துக்குள் போட்டு விட்டார்கள். கூவம் ஆற்றை சீர்படுத்த பெரிய மாஸ்டர் பிளான் வேண்டும். எந்த சார்பு நிலையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூவம் ஆறு பணிகள் குறித்து ரூ.500 கோடிக்கு வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்கின்றார். நானும் கேட்கின்றேன் வெள்ளை அறிக்கை கொடுங்கள். உண்மையாக சீரமைக்க வேண்டும் என்றால் நல்லபடியாக அதுகுறித்து படிக்க வேண்டும்.

இலங்கையில் எந்த அதிபர் வந்தாலும் நல்ல சுமூகமான உறவை கடைபிடித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து மீனவர்களை விடுவிக்க கேட்டு கொண்டு இருக்கின்றோம். மீனவர்கள் மறுவாழ்வு, ஜி.பி.எஸ். கருவி இல்லாமல் எல்லை தாண்டாமல் இருக்க ரூ. 17 கோடிக்கு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கி கொடுத்துள்ளோம்.

மது ஒழிப்பு மாநாடு நாடகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் திட்டமிட்டு செயல்படுத்துகிற ஒரு நாடகம். 17 நாட்கள் தமிழக முதலமைச்சர் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து எதிர்பார்த்த முதலீடு தமிழ்நாட்டிற்கு வரவில்லை. பல நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கிற நிறுவனங்கள் தான், முதலீடு பற்றி மக்கள் கேள்வி கேட்கவில்லை. இதனால் மக்களை திசை திருப்ப திட்டமிட்ட அரங்கேற்றப்பட்ட நாடகம் தான் இது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீரழிந்து இருக்கிறது. கடந்த 3 வருடமாக எங்கு பார்த்தாலும் கொலைகள், கொலையில் சரியான விசாரணை கிடையாது. சரியான கைதுகள் கிடையாது. எனவே சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே என L. முருகன் தெரிவித்தார்.

L. Murugan: “கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியத்தை உணர்த்துகிறார் .!”

சென்னை குன்றத்தூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஒருவர் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 800 கிலோ சிறு தானியங்களை கொண்டு 12 மணி நேரத்தில் 600 சதுர அடியில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்து உலக சாதனை புரிந்தார்.இந்த ஓவியத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார்.

இதையடுத்து இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, “ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த நாட்டிற்கு காலத்தின் கட்டாயம். இதற்காக பெரிய அளவில் கமிட்டி அமைக்கப்பட்டு கருத்து கேட்டு அதன் அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை தந்துள்ளார்கள். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார்.

முதலமைச்சரையும், துணை முதலமைச்சராக வர துடித்து கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எஸ்சி, எஸ்டி விடுதியை பார்க்க வேண்டும். அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது. தமிழர் ஒருவர் நாட்டை ஆள வேண்டும் என்பது வரவேற்கக் கூடியது. பெரிய தேசம் யார் வேண்டுமானாலும் ஆளலாம். பல்வேறு சூழ்நிலை காரணமாக மீனவர்கள் எல்லை தாண்டி போகிறார்கள். பிரதமர் மோடி வந்த பிறகு துப்பாக்கி சூடு சம்பவம் ஏதும் இல்லை. மீனவர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வருகிறோம்.

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஈவேராவிற்கு மாலை செலுத்தினார். விஜய் பொதுவான நபராக இருப்பாரா என்பது கேள்விக்குறி. அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து சொல்லக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும். அவர் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவிப்பது கேள்விக்குறியே” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.