இந்தியா கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு T- 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்தது.
இந்நிலையில் அயர்லாந்தின் பெல்ஃபாஸ்டில் அமைந்துள்ள ஸ்டோர்மாண்ட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து அயர்லாந்து அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான தொடக்கத்தை கொடுக்க மற்றவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் நடையை கட்டினர். கடைசியில் 18.5 ஓவரில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழக்க இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்தது.