போலி நீதிமன்றம்..! போலி நீதிபதி..! போலி வழக்கறிஞர்கள்..! ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி மோசடி..!

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய ஓராண்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி போலி நீதிபதி கைது. அவர் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.

குஜராத் தலைநகர் காந்திநகரில், குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவர் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை உருவாக்கி, அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார். நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என பொது அரங்கில் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை கிறிஸ்டியனின் போலி வழக்கறிஞர்கள் அணுகி உள்ளனர். சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என போலி வழக்கறிஞர்கள் வாக்குறுதி அளித்து உள்ளனர்.

இதை நம்பிய பொதுமக்கள், போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனின் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அசல் நீதிமன்றம் போன்றே போலி நீதிபதி கிறிஸ்டியன் மனுக்கள் மீது விசாரணை நடத்தி உள்ளார். அவரது நீதிமன்றத்தில் நாள்தோறும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று உள்ளன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கிறிஸ்டியன் தனக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காந்தி நகரில் அவர் போலி நீதிமன்றத்தை நடத்தியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுஜி என்பவர் நில விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியனின் போலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார். சுமார் 50 ஆண்டு காலம் அரசு நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என பாபுஜி கோரினார்.

இந்த வழக்கை விசாரிக்க போலிநீதிபதி கிறிஸ்டியன், மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்று கொண்டு, அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட அரசு நிலம் பாபுஜிக்கு சொந்தமானது என்று கிறிஸ்டியன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதுதொடர்பான தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கி உள்ளார். ஆனால் ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி வழக்கு தொடர்ந்து உள்ளார். கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை இணைத்து ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற வேண்டும் என அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகி அவர் கைது செய்யப்பட்டார்.

லாரன்ஸ் பிஷ்னோய் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியா..!?

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட லாரன்ஸ் பிஷ்னோய்க்கு அம்மாநில அரசியல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை லாரன்ஸ் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20 -ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ஆம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வருகிறது. இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்கெனவே அறிவித்த விவகாரம் புயலை கிளம்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் உள்ள நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுமாறு லாரன்ஸ் பிஷ்னோயை அம்மாநில புதிய அரசியல் கட்சியான உத்தர் பாரதிய விகாஸ் சேனா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோயுக்கு, உத்தர் பாரதிய விகாஸ் சேனா தலைவர் சுனில் சுக்லா எழுதியுள்ள கடிதத்தில் தனது அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரது வெற்றிக்காக தங்கள் கட்சி தீவிரமாகப் பாடுபடும் என உறுதி அளித்துள்ளார்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க..! வயதான தம்பதிகள் வீடியோ வைரல்..!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காயலான் கடை நடத்திவரும் வயதான தம்பதியிடம் மாமூல் கேட்டு மறைமலைநகர் காவல்துறை தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் அருகாமையில் வயதான தம்பதி கடந்த சில ஆண்டுகளாக காயலான் கடை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைமலைநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ரோந்து காவல்துறை ரூ.100 முதல் ரூ.200 கட்டாயப்படுத்தி மாமூல் வாங்குவதாகவும், ரோந்து வாகனத்தில் வரும் காவலர்கள் உயர் அதிகாரிக்கும் ஓட்டுனருக்கும் என இருவருக்குமே ரூ.200 கட்டாயப்படுத்தி கேட்டு வாங்குகிறார்கள் என காயிலாங் கடை உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், காவல் நிலையத்திற்கு மாதம், மாமூல் கொடுத்தாலும் ஒரு சில காவலர்கள் பெட்ரோல் போட காசு இல்லை என்று இந்த வழியாக வரும்போது எல்லாம் மாமூல் கேட்கிறார்கள். மீறி தர மறுத்தால் திருட்டு பொருள் வாங்குறீங்க என உங்கள் மீது வழக்கு போட்டு ரீமாண்ட் செய்து விடுவேன் என மிரட்டுகிறார்கள்.

அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் காவல்துறையினர் வரும் போதெல்லாம் ரூ.100, ரூ.200 என மாமூல் கொடுத்து அனுப்புகிறோம். மேலும், எங்கள் கடையை ஒட்டி உள்ள அனைத்து கடைகளுக்கும் இதே நிலைமைதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர். நாங்களே கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் மனசாட்சியே இல்லாம வாங்குறாங்க என மன குமறலையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வயதான தம்பதிகள் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

காலையில் கணவனின் நீண்ட ஆயுளுக்காக விரதம்..! மாலையில் சாப்பாட்டில் விஷம்..!

கணவன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்த பெண்ணின் வீடியோவை கண்டு போலீசார் திகைத்து விட்டார்கள். இது தொடர்பான விசாரணை நடந்து வந்தபோதிலும், வடமாநில மக்கள் கடுமையான அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

நம்ம ஊரில் சுமங்கலி பூஜைகள் செய்யப்படுவதை போல வட இந்தியாவில் “கர்வா சவுத்” கொண்டாடப்படும் பண்டிகையாகும். கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, மனைவிமார்கள் விரதமிருந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த நாளில் பெண்கள் சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை கடுமையான விரதமிருப்பார்கள்.

இதன்மூலம், தங்களது கணவர்களின் ஆயுள் கூடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இந்த ஆண்டு இப்பண்டிகை நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில், உத்தரப்பிரதேசத்திலும் ஒரு பெண் இந்த பண்டிகைக்காக விரதமிருந்து வந்தார். கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள இஸ்மாயில்பூர் பகுதியை சேர்ந்த ஷைலேஷ் குமார் மனைவி சவிதா தன்னுடைய கணவரின் நீண்ட ஆயுளுக்காக, விரதம் மேற்கொண்டு வந்துள்ளார். தனக்காக தன்னுடைய மனைவி விரதமிருப்பதை பார்த்து பூரித்து போனார் கணவர்.

எனவே, இந்த பிரார்த்தனைக்காக மனைவிக்கு உதவியாக ஷைலேஷ்குமார் இருந்து வந்துள்ளார். நேற்று மாலையில் இந்த கர்வா சவுத் விரதம் முடிவடைந்தது. எனவே தம்பதி இருவரும் உணவு சாப்பிட்டுள்ளனர். கணவனுக்காக சாப்பாடு பரிமாறிய மனைவி, அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, பக்கத்து வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த ஷைலேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

இதைப்பார்த்து அவரது சகோதரர் அகிலேஷ்குமார், உடனடியாக ஷைலேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால், மருத்துவர்கள் போராடியும் ஷைலேஷ்குமாரை காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்திலேயே ஷைலேஷ்குமார் உயிர் பிரிந்தது. இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது திடீரென சவிதா வீடியோ ஒன்றை அனுப்பினார். அந்த வீடியோவில், “என்னுடைய கணவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இந்த தகாத உறவு காரணமாகவே அவரை விஷம் வைத்துக் கொன்றேன்” என்று தெரிவித்திருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறை உடனடியாக சவிதா கைது செய்து விசாரணை மேற்கொண்டும் வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல சீமானால் முடியாது..!

நாம் தமிழர் கட்சியை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் முடியாது என கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டியது நாம் தமிழர் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன், நிர்வாகிகள் புகழேந்தி மாறன், சுப தனசேகரன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரியான முடிவுகளை எடுத்து முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணித்தோம்.

பல நேரங்களில் உடன்படாடு இல்லாவிட்டாலும் அமைதிகாத்து, பொறுமையுடன் பின்தொடர்ந்தோம். இதனால் எண்ணற்ற இழப்புகளை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறோம். கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட இயக்கம் தற்போது தான் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது.

இதுவே நாம் தமிழர் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு. நாம் தமிழர் கட்சியின் அரசியல் கோட்பாடு இந்த மண்ணில் நிலை பெற்றுவிட்டது. ஆனால் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதற்கு இனி சீமானால் முடியாது. அந்த திறனும் பார்வையும் அவருக்கு இல்லை.

எனவே ‘தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தமிழர் நலன் சார்ந்து உருவாக்கி இருக்கிறோம். முதல்கட்டமாக திருச்சியில் வரும் 27-ஆம் தேதி இலங்கை போரில் உயிர்நீத்த தமிழர்களுக்காக மாவீரர் நாள் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

அதைத்தொடர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி எங்களது அரசியல் பயணம் தொடங்கும். நாம் தமிழர் கட்சியின் கொள்கை, கோட்பாடு எங்களால் உருவாக்கப்பட்டது. அதே கோட்பாட்டை ஜனநாயக முறையில் சரியாக எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணசாமி சவால் நான் ரெடி..!? திருமா ரெடியா..!?

திருமாவளவன் சொந்த சாதி மக்களுக்கும் உண்மையாக இல்லை எனவும் கூட்டணிக் கட்சிக்கும் உண்மையாக இல்லை எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு குற்றச்சாட்டியுள்ளார். நவம்பர் மாதம் 7 -ஆம் தேதி அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் மாஞ்சோலை தொழிலாளர் ஆதரவு தெரிவித்தும் புதிய தமிழகம் சார்பாகப் பேரணி நடத்தப்படும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக எல்.முருகனுக்கும் திருமாவளவனுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. ‘திருமாவளவன் தலித் மக்கள் அனைவருக்குமான தலைவர் இல்லை. ஆகவே அவர் முதலமைச்சராக முடியாது என மத்திய இணையமைச்சர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த எல்.முருகன் கருத்திற்கு, ‘முருகன் அருந்ததியர் அல்ல. RSS காரர்’ என தொல் திருமாவளவன் பேசி இருந்தார். இந்த திருமாவளவன் கருத்திற்கு எல்.முருகன், ‘RSS காரன் என்பதற்குப் பெருமை கொள்கிறேன்’ என பேசி இருந்தார்.

இப்படி இந்தச் சர்ச்சை தொடக்கப் புள்ளியே அருந்ததியர் Vs தலித் என்ற இரு துருவ மோதலாக மாறி இருக்கிறது. இதனிடையே அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை மு.கருணாநிதி அமல்படுத்திய போது அதை ஆதரித்துவிட்டு, இப்போது உச்சநீதிமன்றம் வரை போய் திருமாவளவன் நிற்பது ஏன்? தும்பை விட்டு வாலை பிடித்து என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணசாமி அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்திலிருந்தே அருந்ததியருக்குப் பிரித்து அளிக்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டை நான் எதிர்த்து வருகிறேன். அருந்ததியருக்கு அளிக்கப்படும் 3% உள் ஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. இங்கே 18% பட்டியலின மக்களின் ஒட்டுமொத்த ஒதுக்கீடும் அருந்ததியருக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் வேலைக்காக 8 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 4 இடங்களை BC மற்றும் MBCக்கு ஒதுக்கிவிட்டனர். அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. மீதி இருந்த 4 இடங்களையும் மொத்தமாக அருந்ததியருக்கே அரசு ஒதுக்கிவிட்டது.

அது எப்படி நியாயமாகும்? பறையர், தேவேந்திரகுல வேளாளருக்கு வழங்கப்பட வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளன. அதேபோல மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 92 இடங்கள் காலியாக இருந்தன. அதில் 92 இடங்களையும் அருந்ததியச் சமூகத்தினருக்கே அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு உதவிப் பெறும் ஆயிரக் கணக்கான தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இதில் பறையர் மற்றும் பள்ளர் வகுப்பினருக்கு 15% இடஒதுக்கீட்டின் படிப் பார்த்தால் ஒன்று அல்லது 2 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.

ஆனால், இந்தப் பள்ளிகளில் கடந்த 14 வருடங்களில் ஒட்டுமொத்த இடங்களும் அருந்ததியருக்கே வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் பட்டியலின மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்படி எதிர்காலத்தில் பிரச்சினை வரும் என்றுதான் நான் தொடக்கத்திலேயே உள் ஒதுக்கீட்டை எதிர்த்தேன். 3% பிரிந்து அருந்ததியருக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதமுள்ள 15% என்பது பறையர் மற்றும் பள்ளர் சமூகத்திற்கானது. அதில் மீண்டும் ஏன் அருந்ததியரை அரசு நுழைக்கிறது. அது ஒரு அநீதி. அன்று இதை ஆதரித்துவிட்டு, இப்போது எதிர்க்கிறேன் திருமாவளவன் என்கிறார்.

அதையாவது உண்மையாக எதிர்க்கிறாரா? என்று அவர் சொல்லட்டும்? திருமா பிறந்த சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. ஆதரவு அளிக்கும் சமூகத்திற்கும் நேர்மையாக இல்லை. இருக்கும் கூட்டணிக்கும் அவர் நேர்மையாக இல்லை. கருணாநிதி நடத்திய கூட்டத்தில் ஆதரித்துவிட்டு இப்போது நீதிமன்றம் திருமா போகிறார். வழக்கு 15 வருடங்களாக நடந்து வருவது அவருக்குத் தெரியுமா? தெரியாதா? கேட்டால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்கிறார்.

சீராய்வு மனு போடுவதற்கு என்ன அர்த்தம்? எதிர்ப்பதா? ஆதரிப்பதா? காலையில் ஒன்று மாலையில் மற்றொன்று எனப் பேசக் கூடாது? வடமாவட்டத்தில் உள்ள பறையர் சமூகத்தினர் மத்தியில் நமக்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுப்போம் என்று பேசத் தயாரா? நம் மக்களுக்காக உண்மையாக இருக்கவேண்டும். திருமாவளவனுக்குப் பதவிதான் பெரிது என்றால் இடஒதுக்கீடு பற்றிப் பேச அவருக்கு உரிமை கிடையாது. அப்படி உண்மையாகவே உள் ஒதுக்கீட்டை எதிர்ப்பவராக இருந்தால் எங்கள் பேரணியில் கலந்துகொள்வாரா? அதற்குத் தயாரா?” என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்

எடப்பாடி பழனிசாமி: உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்..!

உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.

திமுக கட்சியில் பலமில்லை, கூட்டணி பலத்தையே திமுக நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். இதனால் தான் தமிழகம் இன்றைக்கு நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எந்த ஆட்சியும் நிந்தரம் இல்லை. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு அதிமுக ஆட்சிதான். உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து அந்தர்பல்டி அடிக்கும் ஒரே கட்சி திமுக.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதியை முன் நிறுத்துகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. திமுக மூலம் மன்னராட்சியை மீண்டும் தொடங்க நினைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. 50 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்ததால் தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு திமுகவில் உதயநிதியை தவிர வேறு ஆளா இல்லை.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேக வேகமாக உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகளை வழங்கி வருகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவி தரவில்லையே. மூத்த நிர்வாகிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஜெட் வேகத்தில் உதயநிதிக்கு பதவியை வழங்கியுள்ளனர். உதயநிதிக்கு பதவியை மக்கள் கொடுக்கவில்லை. குடும்ப உறுப்பினரான முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கி உள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நவ்யா ஹரிதாஸ்: நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டது..!

நேரு குடும்பம் வயநாடு மக்களை ஏமாற்றி விட்டதாக பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்கா காந்தி முதல் முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர்.

வயநாடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், வயநாடு தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். இதற்கு காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம் மீதான எதிர்ப்பு மனநிலை, உள்ளூர் அரசியல்வாதியாக நான் செய்து வரும் பணிகள், பிரதமர் மோடி மீதான நல்லெண்ணம் ஆகிய3 சாதகமான அம்சங்கள் உள்ளன.

கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுபோல பிரியங்கா காந்தி பரிச்சயமானவர் என்பது உண்மைதான். ஆனால் அவருக்கு தேர்தல் அனுபவம் இல்லை. நேரு குடும்பமும் காங்கிரஸ் கட்சியும் வயநாடு தொகுதி மக்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களை ஏமாற்றி உள்ளனர். வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது நேரு குடும்பத்தினர் தங்களுக்கு உதவவில்லை என்பதை புரிந்துகொண்டனர் என நவ்யா ஹரிதாஸ் தெரிவித்தார்.

ராஜ் ஷெகாவத்: லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்லும் நபருக்கு ரூ.1 கோடி வெகுமதி..!

சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்லும் காவல்துறையினருக்கு ரூ.1,11,11,111 வெகுமதி அளிக்கப்படும் என்று வலதுசாரி அமைப்பு அறிவித்துள்ளது. குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அவ்வப்போது பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை சம்பவத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாபா சித்திக்கின் நண்பரான பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அவ்வப்போது கொலை மிரட்டல்கள் வருகின்றன. இந்நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த வலதுசாரி அமைப்பான க்ஷத்ரிய கர்னி சேனா வெளியிட்ட தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் அறிவிப்பில், ‘லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லும் காவல்துறையினருக்கு ரூ.1 கோடிக்கு மேல் பரிசு வழங்கப்படும்.

அதாவது, லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்லும் காவல்துறை அதிகாரிக்கும் 1,11,11,111 ரூபாய் வெகுமதி வழங்கப்படும்’ என ராஜ் ஷெகாவத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும்..!

கூட்டணி கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்து விடும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கட்டிடத்தின் வலிமைக்கு அஸ்திவாரம் வலுவாக உள்ளதைப் போல அதிமுகவில் கிளைக் கழகம் வலுவாக உள்ளது. எடப்பாடியில் எதிரிகள் புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்கும். நாடாளுமன்றத் தேர்தல் வேறு; சட்டப்பேரவை தேர்தல் வேறு. அடுத்து வரும் ஃபைனல் மேட்சில் அதிமுகதான் வெற்றி பெரும். மக்களுக்கு உண்மை செய்திகள் ஒருநாள் தெரிய வரும் போது திமுக காணாமல் போகும்.

திமுக கட்சியில் பலமில்லை, கூட்டணி பலத்தையே திமுக நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்த கட்சி அதிமுக. எந்தக் கட்சிக்கும் வெற்றி, தோல்வி நிரந்தரம் இல்லை. தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். இதனால் தான் தமிழகம் இன்றைக்கு நாட்டின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். எந்த ஆட்சியும் நிந்தரம் இல்லை. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. உதயநிதி, ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. சிறப்பான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு அதிமுக ஆட்சிதான். உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும் தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து அந்தர்பல்டி அடிக்கும் ஒரே கட்சி திமுக.

திமுகவில் வாரிசு அரசியல்தான் நடக்கிறது. கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின், தற்போது உதயநிதியை முன் நிறுத்துகிறார்கள். இது ஒருபோதும் நடக்காது. திமுக மூலம் மன்னராட்சியை மீண்டும் தொடங்க நினைக்கிறார்கள். கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. 50 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்து படிப்படியாக உயர்ந்ததால் தான் எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. கட்சியில் மூத்த நிர்வாகிகள் பலர் இருந்தும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். துணை முதல்வர் பதவிக்கு திமுகவில் உதயநிதியை தவிர வேறு ஆளா இல்லை.

ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேக வேகமாக உதயநிதிக்கு அடுத்தடுத்து பதவிகளை வழங்கி வருகிறார்கள் என மக்கள் பேசுகிறார்கள். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை. மிசாவில் சிறைக்குச் சென்ற வேறு யாருக்கும் துணை முதல்வர் பதவி தரவில்லையே. மூத்த நிர்வாகிகளை தூக்கி எறிந்துவிட்டு, ஜெட் வேகத்தில் உதயநிதிக்கு பதவியை வழங்கியுள்ளனர். உதயநிதிக்கு பதவியை மக்கள் கொடுக்கவில்லை. குடும்ப உறுப்பினரான முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கி உள்ளார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.