திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்குதாவுது ஆண்டவர் தர்கா உலகப் புகழ் பெற்றது. இந்த தர்காவின் 725-ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 12-ந் தேதி தர்காவில் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான சந்தனக்கூடு விழா கடந்த 21-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது.

இந்த விழாவின் இறுதி நாளான நேற்று கொடியிறக்கம் நிகழ்வு இரவு 9 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு தர்காவில் புனித கொடி இறக்கப்பட்டு இந்த விழாவில் ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர் மேலும் அங்கு வருகை தந்துள்ள அனைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த விழா சிறந்த முறையில் அனைத்து ஜாதி, மதம் கடந்து ஒத்துழைப்பு தந்த அனைத்து மக்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,ம் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, தீயணைப்புத்துறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு பாக்கர் அலி நன்றி தெரிவித்தார்.