மேற்கிந்தியத் தீவுகள் ஆண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 T-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் கடந்த மாதம் 27-ந் தேதி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், அசாம் மாநிலம் குவகாத்தி பார்சபரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து துவக்க வீராங்கனைகளாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் ஜான் கேம்ப்பெல், கீசி கார்டி களமிறங்கிய நிலையில் 4.6 ஓவர்களில் 37 ரன்கள் எடுத்து நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் கீசி கார்டி 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடக்க வீரரான ஜாண் கேம்பல் 68 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், அமிர் ஜாங்கூ 77 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 114 ரன்களும் விளாசி மிரட்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த 3 வீரர்கள் சதம் அடித்து முதன்முறை என்ற நிலையில் 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது.
இதற்கு முன்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணி கடந்த 2019-ம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 389 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக அமைந்திருந்த நிலையில் 405 ரன்களை எடுத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தது.
இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணியின் துவக்க வீராங்கனைகளாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் கார்டி களமிறங்கிய நிலையில் ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். முதல் 10 ஓவர்களில் 92 ரன்களை குவித்தனர். வெறும் 21.1 ஓவர்களிலேயே இந்தியா 200 ரன்களை எட்டி, ஒருநாள் போட்டிகளில் தனது அதிவேக 200 ரன்கள் சாதனையை பதிவு செய்தது.
தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை இந்தியா பந்தாடியது. இந்நிலையில் 26.2 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து நிலையில் ஜெய்டன் சீல்ஸ் பந்து வீச்சில் ரோஹித் சர்மா 75 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் கேப்டன் சுப்மன் கிலுடன் இணைய இந்திய அணி வெறும் 29.1 ஓவர்களிலேயே (175 பந்துகளில்) 300 ரன்களை தொட்டு கிரிக்கெட் உலகை மிரள வைத்தது.

இதற்கு முன்பு 2006 இல் ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 32.2 ஓவர்களில் 300 ரன்களை எட்டியதே அதிவேக உலக சாதனையாக இருந்தது. இங்கிலாந்து 33.1 ஓவர்களிலும், இந்தியா 2009 இல் இலங்கைக்கு எதிராக 34.1 ஓவர்களிலும் 300 ரன்களை கடந்திருந்தன. அந்த அனைத்து முந்தைய சாதனைகளையும் சுக்குநூறாக உடைத்து, 30 ஓவர்களுக்கு முன்பாகவே 300 ரன்களை எட்டிய முதல் அணி என்ற புதிய சகாப்தத்தை இந்தியா உருவாக்கியுள்ளது.
விராட் கோலி 29 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 31* ரன்களும் சேர்க்க, இந்தியா 43.3 ஓவர்களிலேயே 406 ரன்கள் எடுத்து இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் 400 ரன்களை எட்டியதை அடுத்து பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சேஸிங் செய்த அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

உலக அளவில் 2006-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 438 ரன்களை துரத்தியதற்கு அடுத்தபடியாக, 2-வது மிக பிரம்மாண்டமான ஒருநாள் சேஸிங்காக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது. 406 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது 223 ரன்கள் குவித்ததன் மூலம், சேஸிங்கில் அதிகபட்ச தனிநபர் ரன் குவித்த கிளென் மேக்ஸ்வெல்லின் (201 நாட் அவுட்) உலக சாதனையை கில் முறியடித்தார்.
மேலும் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்து, ஒருநாள் சேஸிங் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப் சாதனையை படைத்தது. இதுமட்டுமின்றி வெறும் 117 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டி, இஷான் கிஷனின் (126 பந்துகள்) அதிவேக ஒருநாள் இரட்டை சத உலக சாதனையை தகர்த்தார்.

கேப்டனாக செயல்பட்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு வடிவங்களிலும் இரட்டை சதம் விளாசிய உலகின் முதல் கேப்டன் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 14-வது இருதரப்பு ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.