உத்தரப் பிரதேசத்தில் 37 வயதான நரேந்திர் பாதி தலையை மொட்டை அடித்து, பாதி மீசையை சவரம் செய்து, கழுத்தில் செருப்பு மாலை போட்டு அவரை அவமானப்படுத்தி இருக்கும் சம்பவம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரப் பிரதேசம் ஹர்டோய் மாவட்டம் கங்க்பூர் கிராமத்தில் மெயின்புரியை சேர்ந்த நரேந்திருக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் சோனியா யாதவ் அறிமுகமாகி இருக்கிறார்.
2 பேரும் மெசேஜ் மூலம் 8 நாட்கள் பேசி இருக்கிறார்கள். பிறகு கன்னோஜில் நேரில் சந்தித்து இருக்கிறார்கள். பழக்கம் காதலாக மாறிய நிலையில், 2 பேரும் ஒரு கோயிலில் திருமணம் செய்துக் கொண்டார்கள். குடும்பத்தினர் எதிர்த்தாலும் நரேந்திர் சோனியாவுடன் சேர்ந்து வாழ்ந்து இருக்கிறார். திருமணமாகி சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆன பிறகுதான் சோனியாவுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பது நரேந்திருக்கு தெரிய வந்திருக்கிறது. முதல் கணவர் மூலம் 3 குழந்தைகளும், 2-வது கணவர் முன்னா யாதவ் மூலம் 6 குழந்தைகளும் இருக்கின்றனர்.

அதாவது சோனியாவுக்கு மொத்தம் 9 குழந்தைகள் இருப்பது பிறகுதான் நரேந்திருக்கு தெரியவந்தது. கடந்த ஜூலை மாதம் சோனியாவுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. அவரது வேண்டுகோளின்படி நரேந்திர் அவரை கௌரிகாட்டில் கொண்டு சென்று விட்டிருக்கிறார். அதற்குப் பிறகும் 2 பேரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். குர்சஹைகஞ்சிலுள்ள ஒரு ஹோட்டலிலும் 2 பேரும் பலமுறை சந்தித்திருக்கிறார்கள். சோனியா தன்னிடம் வெவ்வேறு நேரங்களில் ரூ.40 ஆயிரம் வரை கடன் வாங்கியதாகவும் நரேந்திர் சொல்லியுள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் 25-ந் தேதி நரேந்திர் சோனியாவை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது சோனியாவின் செல்போனை பார்த்தபோது, வேறு ஒரு ஆணுடன் அவருக்கு தொடர்பு இருப்பது நரேந்திருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் மறுபடியும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, சோனியா 5 மாத கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்டு ஆடிப்போயுள்ளார். உடனே உச்சக்கட்ட கோபத்துக்குபோன நரேந்திர், சோனியாவை தாக்கியிருக்கிறார்.

இதை சோனியா எதிர்பார்க்கவில்லை. உடனே ஆவேசகத்தில், தனது 4-வது காதலனுடன் சேர்ந்து நரேந்திரவை பிணையாக பிடித்துச் சிறை வைத்தார். அத்துடன் நரேந்திரின் தலையில் பாதியை மொட்டை அடித்திருக்கிறார். கத்தரிக்கோல் மற்றும் ரேசரை வைத்து, பாதி மீசையையும் சவரம் செய்திருக்கிறார். கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து அவரை அவமானப்படுத்தி இருக்கிறார்.
நரேந்திர் கைகூப்பி அழுது கெஞ்சியபோதும் அவரை சோனியா விடவில்லையாம். அங்கிருந்தவர்களும் நரேந்தருக்கு உதவுவதற்கு பதிலாக இந்த காட்சிகளையெல்லாம் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.