இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்த பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான அனுமதியினை மாதம் தோறும் பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெற பிரபாகரன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாளை அனுகியுள்ளார்.
அப்போது சரவண பெருமாள் சவடு மண் எடுக்கும் அனுமதியை வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பிரபாகரன், பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாளுக்கு பாடம் புகட்ட நினைத்து இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அந்த லஞ்ச பணத்தை பிரபாகரன் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாளின் வீட்டிற்குச் சென்று வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவண பெருமாளை உதவி பொறியாளர் கவிதாவை கையும் களவுமாக பிடித்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவம், பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது