திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவனை கட்டையால் அடித்து தாக்கிய சக மாணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே குழாயில் தண்ணீர் குடிப்பதில் தகராறு ஏற்பட்டு சாதிப் பெயரைக் கூறி தாக்கியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாதி ரீதியிலான தாக்குதலால் தனது மகனை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக இருப்பதாக மாணவரின் தாயார் கண்ணீருடன் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.