அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் அடித்த மிரட்டலான கோல் மூலம் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இதனால் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார்.
அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், 1962-ல் பிரேசில் அணிக்கு பிறகு உலகக் கோப்பையைத் தற்காத்துக் கொள்ள நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும் இரண்டாவது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஸ்பெயின் அணிக்கும் இடையே கடுமையான பலப்பரீட்சை நடைபெற்றது.

இந்தத் தொடர் முழுவதும் ஸ்பெயின் அணி வெறும் இரண்டு கோல்களை மட்டுமே எதிரணியினருக்கு விட்டுக் கொடுத்துள்ளது. மேலும் 6 போட்டிகளில் ஒரு கோல் கூட வாங்காமல் தங்களது அபாரமான தடுப்பாட்ட வலிமையை நிரூபித்துள்ளது. அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் அடுத்தடுத்து பல கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார். நிகோ வில்லியம்ஸ் அடித்த கோல் ஒன்றை விஏஆர் (VAR) தொழில்நுட்பம் மறுத்தது. அதேபோல் பெரான் டோரஸ் அடித்த மற்றொரு கோலும் ஆஃப்சைட் என அறிவிக்கப்பட்டது.

அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பரான எமிலியானோ மார்டினெஸ், இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் 11 கோல் முயற்சிகளை எலிமியானோ மார்ட்டினஸ் சாதுரியமாகத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் கூடுதல் நேரம் வரை ஸ்பெயின் அணியை கோல் எதுவும் வாங்காமல் வைத்திருந்ததில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு. ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை ஸ்பெயின் அணி வென்றாலும், அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் செயல்பாடுகள் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா அணி வீரர்கள் அனைவருமே சோகமாக இருந்தனர். இந்தப் போட்டியில் ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணியும் சொதப்பலோ சொதப்பலாக விளையாடியது. ஆனால் ஸ்பெயின் அணியின் அத்தனை வீரர்களுக்கும் அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினஸ் தனியாளாக நின்று பதில் அளித்தார். முதல் பாதியில் ஸ்பெயின் அணி பெரிதாக கோல் அடிக்க தீவிரம் காட்டவில்லை. ஆனால் 2-ஆம் பாதியில் ஸ்பெயின் அணி வீரர்கள் ஒன்று சேர்ந்து அட்டாக் மேல் அட்டாக்கை செய்து கொண்டே இருந்தனர்.

அவர்களை அர்ஜென்டினா வீரர்களால் கொஞ்சம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் எமிலியானோ மார்ட்டினஸ் மட்டும், என்னை தாண்டி முடிந்தால் கோல் அடிங்கடா பார்க்கலாம் என்று அரண் போல் நின்றார். கிட்டத்தட்ட 11 கோல்களை எலிமியானோ மார்ட்டினஸ் தடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கிராஸ் பாஸ், ஹெட்டர், ஃபீரி கிக் வாய்ப்பில் யமால் அடித்த தரமான ஷாட் என்று அத்தனையையும் எலிமியானோ மார்ட்டினஸ் தடுத்தார். ஒருவேளை எமிலியானோ மார்ட்டினஸ் மட்டும் இல்லையென்றால், அர்ஜென்டினா அணி படுதோல்வியை சந்தித்திருக்கும்.

ஸ்பெயின் அணியின் 11 வீரர்களும் சேர்ந்து எமிலியானோ மார்ட்டினஸை வீழ்த்தினர் என்றே சொல்லலாம். ஒருவேளை ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றிருந்தால், அர்ஜென்டினா அணியை தனியாளாக எமிலியானோ மார்ட்டினஸ் வெல்ல வைத்திருந்திருப்பார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.