சமீபத்தில் முதல்வர் விஜய் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த விழிப்புணர்வு வீடியோவில் முதல்வரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த சிலுவை தான் இவ்வளவு பிரச்சனை. மதச்சார்பற்ற அரசின் முதல்வர் எனக் கூறிக்கொள்பவர் மத அடையாளத்தை தனது டேபிளில் வைக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர் சிலர்.
இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் இணையதளத்தில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை பதியலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து இந்த இணையதளம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் விஜய் தனது விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்தார்.
இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டு இருந்த அவர்,” இது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. நீங்கள் வழங்கும் தகவல் தான் எதிர்கால அரசு திட்டங்களுக்கான அடிப்படை. நான் பதிவு செய்துவிட்டேன். நீங்களும் பதிவு செய்யுங்கள் என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது இந்த விவகாரம் வேறு மாதிரியாக திரும்பி இருக்கிறது. விஜய் வெளியிட்டு இருந்த விழிப்புணர்வு வீடியோவை பார்த்த சில நெட்டிஷன்கள் முதல்வரின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய சிலுவையை சுட்டிக்காட்டி பரபரப்பை கிளப்பி இருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
மதச்சார்பற்ற முதல்வர் எனக் கூறிக்கொள்ளும் விஜய் சிலுவையை தனது டேபிளில் வைக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள் அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் பொருட்களை வைக்கக்கூடாது என்று விதி இருக்கும் நிலையில், அரசு அலுவலகங்கள் மதச்சார்பை தன்மையை பிரதிபலிக்க வேண்டும். அரசு அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்தக் கூடாது என்பதே அதன் அடிப்படை நோக்கம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.