தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார்மயமாக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சிகளில் தூய்மை பணிக்கு குடியிருப்பாளர்களிடம் தனி தொகையை வசூலித்துக் கொண்டு தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதற்கு தூய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநகராட்சி தூய்மை பணியை தனியார்மயமாக்க எதிர்ப்பு எழுந்தது.
மேலும், தவெக தேர்தலுக்கு முன் ஒரு பேச்சா, பின் ஒரு பேச்சா என கூட்டணி கட்சிகளே விமர்சித்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியது. இந்நிலையில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.