திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை சார்பில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் G.ராஜூ அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
இவ்விழாவில் காவல் ஆய்வாளர் எம். செந்தூர் பாண்டியன் அவர்கள் மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் பி. ரூபாவதி ஆகியோர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள், அவற்றால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லோ. சதீஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி கண்காணிப்பாளர் அவர்களும் கலந்துகொள்ள மாணவர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரைகளை கவனமுடன் கேட்டறிந்தனர்.