நான் எங்கேயும் போகவில்லை, நான் உங்களுடைய வெற்றியை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், மகிழ்ச்சி… அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது, நிரந்தர தோல்வியும் கிடையாது. DMK காரங்க இந்த ஒரு விஷயத்துக்காக எல்லாம் துவண்டு போவோம்னு நினைக்காதீங்க என ஜூலி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 மணி நிலவரப்படி தவெக 107 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. தமிழக தேர்தல் களம் இன்று எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராகப் பெரிய அளவில் அதிருப்தி அலை இல்லை என்று அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட நிலையில், இப்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் அந்த கணிப்புகளை தலைகீழாக மாற்றியுள்ளன.
இதற்கு முன்பாக MGR கூட கட்சி தொடங்கி இடைத்தேர்தலில் வென்று கூட்டணி அமைத்துதான் 1977-ல் ஆட்சியை பிடித்தார். அதேபோல் திமுக தொடங்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் போராடி தான் ஆட்சியை பிடித்தது. தேமுதிக தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதன் மூலமாக விஜய்யின் தவெக தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெரும்பான்மை இடங்களை பெற்றிருப்பது ஜாதிய கணக்குகளை தமிழ்நாட்டில் முறியடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய் வெற்றி பெற முடியாது என்று முன்பு பலமுறை கருத்து தெரிவித்திருந்த ஜூலி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்தது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியை தேடி விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பிய நிலையில், ஜூலி தன்னுடைய பதிலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ஜூலி கூறியதாவது, “எல்லோரும் என்னை தேடிக்கொண்டே இருந்தீங்க… நான் எங்கேயும் போகவில்லை, இங்கே தான் இருக்கிறேன். நான் உங்களுடைய வெற்றியை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், மகிழ்ச்சி. ஆனால் ஒரு விஷயம் புரியல… அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது, நிரந்தர தோல்வியும் கிடையாது. இது ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க DMK காரங்க. இந்த ஒரு விஷயத்துக்காக எல்லாம் நாங்க துவண்டு போவோம்னு நினைக்காதீங்க என ஜூலி வீடியோ தெரிவித்துள்ளார்.
நாங்க ஜெயித்து உட்கார்ந்ததை விட ஆப்போசிட்ல உட்கார்ந்தது தான் ஜாஸ்தி. நீங்க இப்பதானே ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க. ஆப்போசிட்ல திமுக உட்காரும்போது எவ்வளவு டேஞ்சரஸ்ன்னு இனிதான் உங்களுக்கு புரிய போகுது. நாங்க சண்டை செஞ்சே பழகுனவங்க… வாங்க இனி சண்டை செய்யலாம். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்க போகுது.” கொஞ்சி பேசி இருக்கிறார்