பெண் கல்வி வளர, அவளது உடல் நலனும் வளர வேண்டும்; கழிவறை இல்லாமல், அவளது கனவுகள் கூட அடைக்கலம் தேடும் என கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், பெண் கல்வி வளர, அவளது உடல் நலனும் வளர வேண்டும்; கழிவறை இல்லாமல், அவளது கனவுகள் கூட அடைக்கலம் தேடும்.
“பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” (Beti Bachao, Beti Padhao) என்ற திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் பிறப்பையும் கல்வியையும் பாரத நாட்டில் பாதுகாத்து வருபவர் நமது பிரதமர் நரேந்திர மோடி அவரின் வழியில் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தூய்மை இந்தியா திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம்.

(24)http://7.ai அறக்கட்டளையின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியுதவியுடன், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐந்து மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவிகள் பயன்பெறும் வகையில் 21 நவீன கழிப்பறைகளை அர்ப்பணித்தேன். “ஒரு பள்ளியின் மதிப்பை அதன் நூலகம் மட்டும் அல்ல, அதன் கழிவறையும் தீர்மானிக்கிறது” என வானதி சீனிவாசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.