திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலத்தம்பாடியில் ஜானகி அண்ணி அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் பொன்னிறை கச்சணம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 1000-திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று, பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் சண்முகவேல் என்பவர், மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாடப் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்களை சாக்குகளில் கட்டி, இரும்பு வியாபாரியிடம் எடைக்கு ஏற்றி கொண்டிருந்தார்.

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கேட்டு ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாக்கில் கட்டி டெம்போவில் ஏற்றி அனுப்ப முற்பட்ட அனைத்து பாடப் புத்தகங்களும் நிகழாண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் என்பதால், பொதுமக்கள் இதனை ஏன் மாணவர்களுக்கு வழங்காமல் எடைக்கு போட்டு விற்பனை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் ஆளத்தம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.