நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியம், போலகம் ஊராட்சியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தனது தாய் மற்றும் மனைவியுடன் நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், நாங்க கூரை வீட்டில்தான் இருந்தோம்.. எங்களுக்கு பிரதம மந்திரி வீடு ( பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ) கட்டிக் கொடுப்பதாக காண்ட்ராக்ட் கறாங்க வரச்சொல்லி இருந்தாக … வீட்டை கட்டிக் கொடுக்காமல் பாதியிலே போட்டுபோடாங்க… நாங்கள் பலமுறை யூனியனிலும் கிளார்க் பிரிச்சிடேன் போய் கேட்டோம். அவர்கள் எந்த விதமான நடவடிக்கை எடுத்து வீட்டை பூர்த்தி பண்ணி கொடுக்கல..
அதன் பின்னர் நாங்க மனைவியின் நகை, வட்டிக்கு கடன் மற்றும் குழு பணம் எடுத்து வீட்டை நாங்களே பூர்த்தி பண்ணினோம் அதன் பின்னர் தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரமணி என்பவர் உங்களுக்கு கடைசி பில் ஏத்தி விடப்போறதாக போட்டோ எடுக்க வந்தாரு.. அதன்பின்னர் அவரிடம் பல முறை கேட்டோம் பணம் ஏத்தி விடல. பிறகு யூனியன் போய் கேட்கும்போது ஊராட்சி செயலர் சாமிநாதனும் வீரமணியும் சேர்ந்து செக் போட்டு எடுத்துட்டாங்க என தெரிவித்தனர். இது குறித்து அவர்களிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. ஆகையால் முதலமைச்சரும் ஆட்சியரும் விசாரணை நடத்தி 88,000 பணத்தை எங்கள் பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.